Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27

மும்பை

எடியாஸ் (eTIOS) பிரச்னையிலும், மாள்விகாவின் இறப்பிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால், இண்டிஸ் கேப் குறித்த விஷயங்களை வருண் கையாளட்டும் என ஆதித்யா விட்டுவிட்டார். வருண் பெரிய தவறு எதுவும் செய்துவிடப் போவதில்லை. ஃபேஸ்புக்குடன்  சேர்ந்து ப்ரமோஷன் ஆரம்பித்த பத்து நாள்களுக்குள் டவுன்ஸ்விலே விளையாட்டை விளையாடு கிற வர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொட்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் வருணைச் சந்திக்க `ஹெட் ஆஃப் புரோக் ராமிங்’ வந்தார்.

‘`வருண், ஒரு சிறிய பிரச்னை’’ என்றார்.

‘‘யெஸ்?”

‘‘சுமார் 8000 கேமர்கள் ஆறாவது நிலைக்கு மேல் விளையாட முடியாமல் சிக்கிக்கொண்டிருக் கிறார்கள். பெய்ட் சீட்ஸும் (paid cheats) அவர்களுக்கு உதவுவதாக இல்லை. அந்த நிலையைத் தாண்டிச் செல்ல அவர்கள் குறைந்தது இருபது முறையாவது முயற்சி செய்திருப்பார்கள்’’.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27

‘`இதற்கு என்ன காரணம்?’’ 

‘`ப்ரிடிக்டிவ் அல்காரிதத்தில் (predictive algorithm) இருக்கக்கூடிய பக் (bug) காரணமாக இருக்கலாம்.  கேம் எங்கோ ஒரு லூப்பில் மாட்டிக்கொண்டது. அதிலிருந்து எப்படி வெளியேவந்து அடுத்த நிலைக்குச் செல்வது என அவர் களுக்குத் தெரியவில்லை. நாம் தலையிட்டு புரோகிராமை மாற்றி அமைக்காத வரையில் அவர் களால் அடுத்த நிலைக்குச் செல்ல முடியாது’’.

‘`என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?”

‘`நான்கு புரோகிராமர்களை ஒரு வாரத்துக்கு அவர்களது வழக்கமான வேலையிலிருந்து விடுவித்து,  இதில் சில மாற்றங்கள் செய்யச் சொல்லி அப்டேட்டை வெளியிடும்பட்சத்தில் இதில் இருக்கும் பக்கை சரிசெய்ய முடியும்’’.

‘`நான்கு புரோகிராமர்கள் ஒரு வாரத்துக்கா? அதுவும் டவுன்ஸ் விலே-கேம் சம்பந்தமாக நாம் முழுமூச்சுடன் வேலை செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலா? இது திரும்பவும் நம்மை கேம் டெவலப்மெண்ட் நிலைக்கே கொண்டு செல்லும்’’.

‘`அப்படியானால், இந்த பக்கை எப்படி  சரிசெய்வது?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27

‘`டோன் ஒர்ரி. ஆறு லட்சம் பேர் விளையாடும்போது இந்த பக்கினால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை ஒரு  சதவிகிதத்துக்கு அதிகமில்லை.  அவர்கள் விளையாடுவதை நிறுத்தினால் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை’’.
 
‘`ஆனால், வருண்….’’

‘`தாங்க் யூ, எனக்கு வேறு வேலை இருக்கிறது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்றவன், தனது டேபிளிலிருந்து ஒரு சி.வி-யை (CV) எடுத்துத் தந்தான். ‘`நீங்கள் என்ன நினைக் கிறீர்களோ, அதை இவர் மூலம் செய்யுங்கள். இப்போதைக்கு என்னால் இதைத்தான் செய்ய முடியும்’’ என்றான்.

வருண் தனது கடிகாரத்தைப் பார்க்க, அது இரவு எட்டு எனக் காட்டியது. அவன் தான்யா வுடன் டின்னர் சாப்பிடுவதாக வாக்களித்திருந்தான்.

வாஷிங்டன் DC

காயமடைந்திருந்த நிக்கி டான் மற்றும் இரண்டு காவல் அதிகாரிகளின் உடலோடு ஆம்புலன்ஸ் விரைந்தது. ஆரம்ப கட்ட விசாரணைக்குப்பிறகே ஜோஷின் உடல் புலன் விசாரணைக்கு அளிக்கப்படும். எஃப்.பி.ஐ-யிலிருந்து தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழு அங்கே வந்து சேர்ந்தது. டோனி, ஜோஷின் பையிலிருந்ததைக் கவனமாக எடுக்கத் தொடங்கினார்.

படிக்கப்படாத பத்திரிகை ஒன்றை அவருடைய பையில் இருந்து எடுத்துக்கொண்டே, ‘‘தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டே இவர் இங்கு வந்திருப்பான் போல’’ என டோனி சொன்னார். தோளில் போடும் பையைத் திறந்து அதில் என்னென்ன  இருக்கிறது எனப் பார்த்தார். ‘‘இது என்ன?” அவர் இறைச்சி வெட்டும் ஒரு பெரிய கத்தியையும், ஒரு சிறிய துணியையும் வெளியே எடுக்கையில் அதில் சாவி ஒன்று இருப்பதையும் பார்த்தார்.

‘‘வெயிட், இந்தப் பையில் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது. அதுவும் குளிர்ச்சியாக இருக்கிறது. சாஸேஜ் போலத் தெரிகிறது.’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27

‘`என்னது, சாஸேஜா?’’ ஏட்ரியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தோளில் போடும் பையில் நான்கு அங்குல நீளமிருந்த சாஸேஜை வெளியே எடுத்து ஏட்ரியன் பார்ப்ப தற்காகத் தூக்கிப் பிடித்திருந்தார்.  ‘`என்ன இழவு இது?’’ என்றபடி ஆதாரங்களைப் போட்டு வைக்கும் பையில் அதைப் போட்டார்.

‘‘அது சாஸேஜ் இல்லை. மனித உடம்பிலிருந்து வெட்டப்பட்ட விரல் போலத் தெரிகிறது.’’ நிக்கி டானின் வலது கையைத் தொடும் போது ஒரு மாதிரியான உணர்வு ஏற்பட்டதை இப்போது அவர் நினைவுக்குக் கொண்டு வந்தார். நான்கு விரல்கள்தான் இருக்கின்றன என்பதை அவர் உணரவில்லை. தாக்குதலினால் ஏற்பட்ட காயமாக இருக்கும் என அவர் நினைத்திருந்தார்.

‘`ஒருவரின் விரலை வெட்டி எடுத்துச் செல்லும் இவன் என்ன மாதிரியான மனிதன்?’’  ஆதாரங்கள் எல்லாம் இருக்கும் பையில் அந்த விரலை டோனி போட்டார். அந்த விரலை இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் பளபளப்பான மோதிரத்தை ஏட்ரியனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

வாஷிங்டன் DC

‘`நான் நோயாளியைக் குறித்துக் கருத்து எதுவும் கூறுவதற்குமுன் அவரைக் கண்காணிக்க வேண்டும்’.

நிக்கி டான் உடல்நிலை குறித்துக் கேட்டதற்கு இதை மட்டும் தான் டாக்டர் கூறினார். இதயத்துக்கு ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் அவர் உடலுக்குள் புல்லட் பாய்ந்திருந்தது. பெரும்பாலானவர்கள் இந்த மாதிரியான தாக்குதலில் இறந்துபோயிருப்பார்கள் ஆனால், நிக்கி ஒரு வலிமையான பெண்மணி என்பதால், இறக்கவில்லை. அவர் வாழ்க்கையில் பல சிரமங்களைச் சந்தித்திருக்கிறார். ஜில்லியனின் படுகொலை சம்பந்தமான விசாரணையின்போது இவரைச் சந்தித்த சமயங்களில் ஏட்ரியன் இவருடைய வலிமையையும், உறுதியையும் நினைத்து வியந்திருக்கிறார்.

நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் பொறுப்பிலிருந்த டாக்டரைச் சந்தித்தபின், நிக்கி எந்த அறையில் இருக்கிறார் என்பதை ஏட்ரியன் அறிந்துகொண்டு, அதைச் சுற்றிப் போடப் பட்டிருக்கும் பாதுகாப்பைப் பரிசீலித்துக் கொண்டுவரும்போது  ஜில்லியன், நிக்கியின் மகளான க்ளோரியா டானைப் பார்த்தார். பதின்மவயதில் இருக்கும் அவள் இன்றைக்கு மிகவும் பாதிக்கப்பட்டவளாகத் தோற்றமளித்தாள்.

‘`நான் இப்போதுதான் டாக்டரைப் பார்த்தேன். உன் அம்மா விரைவில் குணமாகிவிடுவார்’’ என க்ளோரியாவுக்கு அருகில் உட்கார்ந்து அவளுக்கு ஆறுதல் சொன்னார் ஏட்ரியன்.

‘`என் அம்மாவைத் தாக்கியவை எப்படிக்  கண்டுபிடிக்கப் போகிறீர்கள்?’’  

‘`அவன் ஏற்கெனவே இறந்துவிட்டான்’’.

‘`அவன் ஒருவன்தான் இதைச் செய்தான் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா? அவனைச் சார்ந்தவர்கள் வேறு யாராவது இருந்தால் என்ன செய்வது?”

‘`அப்படி யாராவது இருந்தால், நாங்கள் பிடித்துவிடுவோம்’’  என்ற ஏட்ரியன் மனதிலும் பல கேள்விகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஊர்ஜிதமாகாத கேள்விகள். அவர் ஃபோன் அடித்தது. டோனி பேசினார்.

‘`ஏட்ரியன், நீங்கள் இங்கே வர முடியுமா?”

‘`ஏன்... என்னாச்சு?’’

‘‘நீங்களே இங்கே வந்து பாருங்கள்!’’ என டோனி கூறினார்.

ஜோஷி பற்றிய தகவல்கள் அறிந்துவர டோனி யோடு ஒரு குழுவை அனுப்பி வைத்திருந்தார் ஏட்ரியன்.

டோனி அழைத்த 30  நிமிடங்களுக்குப்பின் ஜோஷியின் அப்பார்ட்மெண்டுக்கு ஏட்ரியன் வந்தார். ஏட்ரியன் அப்பார்ட்மெண்டின் கதவைத் திறந்தபோது, ‘`இதோ, இங்கே!’’ என டோனி சத்தமாகக் கூறினார்.

அவருடைய சத்தம் வந்த திசையை நோக்கி ஏட்ரியன் செல்ல, அங்கே சில பேப்பர் களுடன் டோனி பிசியாக இருந்தார். அவர் அறைக்குள் நுழைந்த அந்தத் தருணத்தில் அப்படியே உறைந்து போய்விட்டார். படுக்கையில் கட்டுக்கட்டாக டாலர் நோட்டுகள்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27

‘`எங்கேயிருந்து வந்தது இவ்வளவு பணம்?’’

அந்த அறையின் மூலையை நோக்கி டோனி கையைக் காண்பிக்க அங்கே இரண்டு சூட்கேஸ்கள் இருந்தன. ‘`அவற்றில்தான் இந்தப் பணக்கட்டுகள் இருந்தன.’’ இன்னொரு மூலையில் எண்ணற்ற அளவில் பேக்குகள் குவிந்துகிடந்தன. ஏட்ரியன் எண்ணும்போது அந்தக் குவியலில் 12 பேக்குகள் இருந்தன.

‘‘ஏ.டி.எம் வீடியோ காணொலியில் பார்த்த ஸ்கீரின்ஷாட்டில் தெரிந்த பேக்குகளுடன் ஒரே மாதிரி இருக்கின்றன’’ ஏட்ரியன் சொன்னதைற்குத் தலையசைத்த டோனி, அந்த அறையின் கடைசியில் இருந்த மூலைக்கு ஏட்ரியனை அழைத்துச் சென்றார். அங்கிருந்த டேபிளில் சின்னச் சின்னப் பாக்கெட்டுகள் பல இருந்தன. ‘`மரிஜுவானா, கொஞ்சமாக இருக்கிறது. வழக்குப் பதிவு செய்வதற்கு இது போதாது’’ என்றார்.
‘`இன்னொரு ஆதாரம் கிடைத்திருக்கிறது. நாங்கள் வலுக்கட்டாயமாகத் திறந்த வாலட்டுக்குள் இது இருந்தது’’ என்றபடி ஒரு டைரியைக் காட்டினான் டோனி. அதன்  முதல் பக்கத்தை ஏட்ரியன் புரட்டியபோது அவரது கண்கள் ஆச்சரியத்தில்  விரிந்தன. அதில் சில பெயர்களும், ஆல்ஃபா நியூமெரிக் குறியீடுகளும் எழுதப்பட்டிருந்தன. அந்தக் குறியீடுகள் பிட்காயின் வாலட்டுகளின் பப்ளிக் கீ–க்கு உரியவை என்று தெரிந்தது. அதன்பின் தேதிகளும், மதிப்பும் எழுதப்பட்டிருந்தன. குறிப்பிட்டிருந்த பெயர்களின் வாலட்டுகளுக்கு பிட்காயின் அனுப்புவது குறித்த `மேனுவல் லெட்ஜர்’ அது எனத் தெளிவாகத் தெரிந்தது.

‘`ஏன் ஒருவர் பலருக்கு  பிட்காயின் ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்?’’

‘`ஒருவர் ரகசியமாகத் தொழில் செய்தால் மட்டும் பிட்காயின் மூலம் பணம் செலுத்தவோ அல்லது பெறவோ செய்வார்’’ என்று சொல்லியதற்கு ஏட்ரியன் தலையசைத்தார். அந்த அப்பார்ட் மெண்டில் இருந்த இரண்டு மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டன, அதில் ஒன்று `மேக்’. இரண்டுமே தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்பார்ட்மெண்டின் உரிமையாளர் அழைக்கப் பட்டார். அவர் ஜோஷின் அறை நண்பனான ஸ்டான் பற்றி விவரித்தார்.

‘`ஃபேஷியல் ஸ்கேன்’ செய்யுங்கள் என்ற ஏட்ரியன், ‘‘அந்த அப்பார்ட்மெண்ட் முழு வதையும் தலைகீழாகச் சோதனை செய்யுங்கள். நிக்கி டானை கொலை செய்ய முயற்சி செய்ததற்கும் மேலாகப் பல்வேறு விஷயங் களுக்கான திறவுகோல் இவனிடத்தில் இருக்கக் கூடும்’’ என்றார்.

(பித்தலாட்டம் தொடரும்)

-  ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்