‘தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவி கொலை செய்தார்... மனைவியைக் கணவன் கொலை செய்தார்’ என ஏராளமான செய்திகளைக் கடந்து வந்திருக்கிறோம். ஆனால், காதலனுடன் சேர்வதற்காகத் தன் இரண்டு குழந்தைகளுக்குப் பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்துக் கொலை செய்த ஒரு தாயை இப்போதுதான் காண்கிறோம். தமிழகம் முழுவதும் அனைவரையும் பதைபதைக்கச் செய்துள்ள இந்தக் கொடூரக் கொலை நிகழ்ந்த இடம் சென்னைக்கு அருகேயுள்ள குன்றத்தூர்.

தன் குழந்தைகளைக் கொலை செய்த அபிராமியின் வீடு அமைந்துள்ள குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியில் உள்ள அங்கனீஸ்வரர் தெருவுக்குச் சென்றோம். அபிராமியின் வீட்டுக்கு எதிரேயுள்ள மளிகைக் கடைக்காரரிடம் பேசினோம். “அந்தப் பொம்பளையைப் பத்தி எதுவுமே கேக்காதீங்க. அவ்ளோ ஆத்திரமா வருது. எனக்கு அந்தப் பிள்ளைங்க நினைப்பாவே இருக்குங்க. அந்தப் பையன் தினமும் சாயங்காலம் கீழ இறங்கி என் கடைக்கு லேஸ் பாக்கெட் வாங்க வருவான். ‘தாத்தா எனக்கொரு லேஸ்.. எங்க பாப்பாவுக்கொரு சாக்லேட்’னு அதிகாரமா கேப்பான். ரொம்ப ஷார்ப்பான பையன். தூக்க மாத்திரை கொடுத்து அவன் சாகலைன்னு தெரிஞ்ச பிறகாவது அவனை விட்டுருக்கலாம்ல. திரும்பவும் பால்ல விஷம் கலந்து கொடுத்திருக்கு அந்தப் பொண்ணு. அப்படிச் செய்யிறதுக்கு அந்தப் பொம்பள மனசு பாறாங்கல்லாதான் இருந்திருக்கணும். பையன் மடமடன்னு குடிச்சுட்டு, அவங்க அம்மாவுக்கு முத்தம் கொடுத்தானாம். அதை நினைக்க நினைக்க எனக்கு அழுகையும் ஆத்திரமாவும் வருதுங்க. எங்கிட்ட இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க...” என்றவாறு கையெடுத்துக் கும்பிட்டார்.

அபிராமி வீட்டின் அருகில் வசிக்கும் ஒரு பெண், “இங்க இருக்க யாருக்குமே அந்தப் பொண்ணை அவ்வளவா பிடிக்காதுங்க. அது ட்ரஸ்ஸிங்லாம் ஒரு மாதிரியா இருக்கும். எப்பவும் மேக்கப் கலையாம திரியும். எப்பப் பாத்தாலும் வண்டியில போயிட்டும் வந்துட்டும் இருக்கும். இப்போ மாட்டின பையன் இல்ல... இன்னொரு பையன்கூடத்தான் அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கேன். இந்தப் பொண்ணு வாடகைக்கு இருந்த வீட்டு ஓனரம்மாதான், அந்த ரெண்டு குழந்தைங்களையும் பாத்துப்பாங்க. முதல்நாள் சாயங்காலம் வீட்டுக்கு வெளியே விளையாடிட்டு இருந்த பிள்ளைங்களை, மறுநாள் பெட்ஷீட்ல மூட்டையா தூக்கிட்டு வர்றதைப் பார்த்தப்போ, என் ஈரக்கொலையே நடுங்கிப்போயிடுச்சுங்க. அவளுக்கெல்லாம் தூக்குத்தண்டனைதான் கொடுக்கணும்” என்றார்.

அபிராமி செய்த கொலைக்குப் பின்னணி என்னவாக இருக்குமென அந்தத் தெருவில் நடமாடிய ஒவ்வொருவரிடமும் விசாரித்தபோது, ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தனியாக அழைத்து அழுதவாறு சொன்னார். “16 வருஷமா எனக்குக் குழந்தை இல்லைங்க. இந்தப் பொண்ணு, பிள்ளைங்கள கொலை பண்ணாம விட்டுருந்தா, நானாவது எம் பிள்ளைங்க மாதிரி வளர்த்திருப்பேன்” என்றார்.

அந்தத் தெருவில் யாரிடம் பேசினாலும், ‘வீட்டு ஓனர் சுமதியம்மா அந்தப் பிள்ளைங்க மேல அவ்ளோ பாசமா இருப்பாங்க. அவங்க வீட்லதான் அந்தக் குழந்தைங்க எப்பவுமே இருக்கும்ங்க” என்று சொன்னார்கள். அபிராமி குடியிருந்த வீட்டிற்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்தது. ஹவுஸ் ஓனர் வீட்டுக்குச் சென்று சுமதியைச் சந்தித்தோம். அழுதழுது ஓய்ந்துபோய் சுவற்றில் சாய்ந்திருந்த அவரை பால்கனிக்குக் கூட்டிவந்தார்கள். “பேச வாயைத் திறந்தாலே அழுகைதான் வருது தம்பி. குழந்தைங்க ரெண்டும் அவ்ளோ பாசமானதுங்க. அதுங்க பொறந்ததுல இருந்து நான்தான் வளர்த்தேன். இங்கேதான் இருக்கும்ங்க. கார்னிகா, என் கூடவே இருக்கும். டீயில பிஸ்கட் தொட்டு ஊட்டுனா, அதைக் கையில வாங்கி எனக்கு ஊட்டும்...” என்றவர் மீண்டும் அழ ஆரம்பிக்க, சுமதியின் கணவர் முத்து பேசத் தொடங்கினார்.

“அபிராமியின் கணவர் விஜய் ரொம்பத் தங்கமான பையன். பொண்டாட்டியையும் பிள்ளைங்களையும் அவ்ளோ அருமையா பார்த்துப்பான். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், ஊறப் போட்டிருக்கற துணியைத் துவைச்சுட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பான். பொண்டாட்டி ஏதோ தப்பு செய்றாள்னு தெரிஞ்சி சண்டை போட்டான். ஒருவேளை அவ விட்டுட்டுப் போனா போகட்டும்னுதான் இருந்தான். பிள்ளைகளை அவ கொன்னுட்டுப் போவான்னு யாரும் நினைக்கல. வழக்கமா வீட்டுக்குள்ள நான் நுழையுறப்போ, ஆனந்தமும் ஆர்ப்பாட்டமுமா குழந்தைங்க விளையாடிட்டு இருப்பாங்க. அந்தச் சத்தம் கேட்காம வீட்டுக்குள்ள இருக்கவே பிடிக்கல’’ என்றார் சோகத்துடன்.

“என்கிட்டே நல்லா பேசிட்டு இருந்த அபிராமி, கொஞ்ச நாளா பேசுறதையே நிறுத்திட்டா. சில நேரம் குழந்தைங்களை வீட்டுக்குள்ள வெச்சு வெளியே பூட்டிட்டுப் போயிருவா. அந்தப் பசங்களும் அடம் பண்ணாம அமைதியா இருப்பாங்க. அம்மா மேல அவ்ளோ அன்பா இருக்குங்க. அந்தப் பிள்ளைங்களையே அவ கொன்னுட்டா. முதல்நாள் கொடுத்த தூக்க மாத்திரையில மகன் அஜய் இறக்கல. மறுநாள், அவனையே கடையில போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வரச்சொல்லி, அதிகமா மருந்து கலந்து கொடுத்துருக்கா” என்று ஆவேசமடைந்தார் சுமதி.

அபிராமி செய்த குற்றத்தின் பின்னணியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக குன்றத்தூர் காவல்நிலையம் சென்றோம். இந்த வழக்கை விசாரிக்கும் ஆய்வாளர் சார்லஸிடம், ‘‘அபிராமியின் கணவர் விஜய்யிடம் பேச வேண்டும்’’ என்றோம். அங்கிருந்த ஒரு மர பெஞ்சில் துவண்டுபோய் உட்கார்ந்திருந்த ஒருவரைக் காட்டி, “அவர்தான் விஜய்” என்றார் ஆய்வாளர்.

அழுகையுடன் பேச ஆரம்பித்த விஜய், “எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே இல்லை. என் பொண்ணையும் பையனையும்தான் என் அப்பா அம்மாவா நெனச்சேன். அவளுக்கு என்கூட வாழப் பிடிக்கலைன்னா, போயிட்டே இருந்திருக்கலாமே... அவ தப்பு பண்றாள்னு தெரிஞ்சும், மன்னிச்சேன். இனி ஒழுங்கா நடந்துப்பாள்னு நம்பினேன். நான் செய்தது அந்த ஒரு தப்புதான். அந்தப் பாவத்துக்கு அவ எனக்கு மட்டும் விஷம் கொடுத்துக் கொன்னுருக்கலாம். என் பிள்ளைங்க என்ன பண்ணுச்சுங்க? அசந்து கண்ணை மூடினாக்கூட ரெண்டும் ‘அப்பா... அப்பா...’ன்னு ஓடிவந்து என் தாடையைப் பிடிச்சுப் பேசுற குரலுதான் கேக்குது. தினமும் வேலைக்குப் போகும்போது ரெண்டுபேருக்கும் முத்தம் கொடுத்துட்டுதான் போவேன். அன்னைக்கு காலையில பிள்ளைங்களை நெருங்கவே அபிராமி விடலை. ராத்திரி வேலை இருந்ததாலே நான் வீட்டுக்கும் வரல. மறுநாள் வீட்டுக்கு வந்தா அவ இல்லை. பிள்ளைங்க ரெண்டும் கட்டில் மேல கிடந்ததுங்க. தூங்குதுங்க போலன்னு சத்தம் போடாம ‘அபிராமி அபிராமி’ன்னு கூப்பிட்டுக்கிட்டு பிள்ளைங்ககிட்ட போறேன். ஒரு அசைவும் இல்ல. என் புள்ளைங்களுக்கு முத்தம் கொடுத்தேன். ரெண்டும் உயிரோடவே இல்லங்க...” என்று கதறினார்.

‘நம் அம்மாதானே பால் கொடுக்கிறார்’ என நம்பிக் குடித்த அந்தப் பிஞ்சுகளுக்குத் தெரியுமா, நம் அம்மாவின் சுயநலத்துக்குத் தங்களை பலியிடப்போகும் நஞ்சு அதில் கலந்து இருக்கிறதென்று!

- தமிழ்ப்பிரபா
படங்கள்: வ.யஷ்வந்த்