Published:Updated:

மோசடிக் கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தைப் பறிகொடுத்த முதன்மைக் கல்வி அலுவலர்!

மோசடிக் கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தைப் பறிகொடுத்த முதன்மைக் கல்வி அலுவலர்!
மோசடிக் கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தைப் பறிகொடுத்த முதன்மைக் கல்வி அலுவலர்!

மர்ம கும்பலிடம் ஏ.டி.எம் கார்டு நம்பரைக் கொடுத்து 78,000 பணத்தை ஏமாந்திருக்கிறார் கல்வித்துறை முதன்மை அதிகாரி. அறிவைப் போதிக்கும் ஆசிரியரிடமே நூதனக் கொள்ளை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

அரியலூர் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அதிகாரியாகப் புகழேந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் திருச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். ஏ.டி.எம் கார்டை புதுப்பிப்பதற்காக வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த நிலையில், பி.ஹெச்டி முடித்த புகழேந்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாகவும் ஏ.டி.எம் கார்டு நம்பர் மற்றும் பின் நம்பரைக் கேட்டுள்ளனர் அந்த மோசடிக் கும்பல். புது ஏ.டி.எம் கார்டுக்கு விண்ணப்பம் செய்துள்ள நிலையில், வங்கியிலிருந்த பேசுவதாக வந்த போனுக்கு எவ்வித யோசனையும் இன்றி மோசடிக் கும்பல் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளார். OTP நம்பரை மூன்று முறை கொடுத்துள்ளார். 
 

இந்த நிலையில், சிறிது நேரத்தில் அதிகாரியின் செல்போனுக்கு வங்கியிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வங்கி கணக்கில் இருந்து 78,000 ரூபாய்க்குப் பொருள்கள் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தது. 
 

இதையடுத்து வாங்காத பொருள்களுக்கு 78,000 ரூபாய் களவாடப்பட்டது அறிந்து அதிகாரி அதிர்ச்சி அடைந்து அரியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அரசு மற்றும் வங்கியின் சார்பில் இவ்வாறான மோசடி பேர்வழிகளுக்கு தங்களது ஏ.டி.எம் கார்டு நம்பரைக் கூறக்கூடாது என பல்வேறு முறைகளில் விளம்பரப்படுத்தி வருகிறது.

மேலும், இது குறித்து யாராவது தகவல் கேட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் துறையிடம் புகார் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தின் கல்வித்துறைக்கு முதன்மை  அதிகாரியிடமே மோசடிக் கும்பல் இவ்வாறு மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.