Published:Updated:

புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!
பிரீமியம் ஸ்டோரி
புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

Published:Updated:
புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!
பிரீமியம் ஸ்டோரி
புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

சென்னை புழல் சிறையில் குறிப்பிட்ட பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள சில கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், அவர்கள் சுதந்திரமாகச் சுற்றி வருவதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி, பரபரப்பு ஏற்பட்டது. சில அதிகாரிகளை மாட்டிவிடும் நோக்கில் அந்தப் படங்களை ரிலீஸ் செய்தார்களா... அல்லது, கைதிகளுக்குள் உள்ள கோஷ்டி பூசலில் ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொடுத்தார்களா என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

‘‘வந்தது கொஞ்சம்தான். மேலும் பல திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியில் பலரிடம் உள்ளன. அவை எந்த நிமிடமும் வெளியாகலாம்’’ என்று அதிரவைக்கிறார்கள் சில அதிகாரிகள். குறிப்பாக, ஒரு வீடியோ பற்றிச் சிறைத்துறை அதிகாரிகள் சிலர் திகிலுடன் பேசுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் ஒருவர் ஐ.டி ரெய்டில் சிக்கி புழல் சிறைக்கு வந்தார். கூடவே கூட்டாளிகளும் வந்தனர். காஞ்சிபுரத்தைக் குலைநடுங்க வைத்த ஒரு தாதாவின் உடன்பிறப்பும் அப்போது புழல் சிறையில் இருந்தது. இப்படி ஆறு பேர் சேர்ந்து சிறை வளாகத்தை எலைட் பாராக நினைத்து ஹாயாக மது அருந்தும் வீடியோதான் அது. விரைவில் அது வெளியாகக்கூடும்.  

புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

கடந்த ஆறு மாதங்களாக, புழல் மத்தியச் சிறையில் தறிகெட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் சில கைதிகள். அங்கே தற்போது பணியில் இருக்கும் ஓர் அதிகாரி, மருத்துவ விடுப்பு முடிந்து சமீபத்தில் பணிக்கு வந்திருக்கிறார். இவரது கட்டுப்பாட்டில் இப்போது சிறைச்சாலை நிர்வாகம் இல்லையாம். இங்கு முக்கியப் பணியில் இருந்த அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றாராம். இவரின் கடைசி கட்ட அறுவடைக்காக, பணக்கார கைதிகளுக்குப் பலவித மறைமுகச் சலுகைகள் தரப்பட்டதாம். இன்னொரு அதிகாரியும் இதே பாணியில் புகுந்து விளையாட... தகவல் தெரிந்து அவரை வேறு சிறைக்கு மாற்றினார்களாம். இந்தக் காலகட்டத்தில்தான், கைதிகள் அறைகளில் செல்போன்கள், வெளிப்படையான வசதிகள் பலவும் வந்து சேர்ந்தனவாம். இதில், சிறைத்துறையின் உளவுப்பிரிவினர் கோட்டைவிட்டது குறித்து சிறைத்துறைத் தலைவரான அசுதோஷ் சுக்லா ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை.

2015-ல் சிறைச்சாலையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் இருந்த கைதிகள் சிலர் அங்கே ரோந்துப் பணியில் இருந்த இரண்டு வார்டன்களைப் பிடித்துப் பிணைக்கைதிகளாக வைத்துக் கொண்டனர். அப்போதைய சிறைத்துறை உளவுப்பிரிவு டி.ஐ.ஜி-யான மௌரியா மற்றும் சிலர் சுவரேறிக் குதித்து உள்ளே போய் பேச்சுவார்த்தை நடத்தி, வார்டன்களை மீட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

அதன்பிறகு புழல் சிறையின் ‘ஏ’ பிளாக்கில் இன்னொரு சம்பவம் இந்த மூன்றாம் தேதி அரங்கேறியது. சிறைத் துறையின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள், திடீரென ‘ஏ’ வகுப்பு சிறை உள்ளிட்ட சில இடங்களைச் சோதனையிட்டனர். அப்போது, சில பொருட்களைக் கைப்பற்றினர். அவற்றில் சில செல்போன்களும் அடக்கம். ஒரு செல்போனில் சோதித்தபோது, சிறை சொகுசு வாழ்க்கைப் படங்கள் இருந்தன. சிறை அதிகாரிகள் சிலரே இந்தப் படங்களைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். பறிமுதல் செய்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை, சட்டச் சம்பிரதாயங்களை முடித்து மறுநாளே புழல் காவல்நிலையத்தில் அடுத்தகட்ட விசாரணைக்காக ஒப்படைத்தனர். 

கடந்த மூன்று ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஐந்து இளைஞர்களைக் கைதுசெய்தனர். அந்த ஐந்து பேரும் சென்னை புழல் சிறையில் இருந்தனர். அதில் முகமது ரிக்காஸ் என்பவர் மட்டும் ‘ஏ’ பிளாக்கில் அடைக்கப்பட்டார். இவர், இலங்கையின் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர். மற்றவர்கள் சாதாரண வகுப்பில் அடைக்கப்பட்டனர்.

இந்த முகம்மது ரிக்காஸ், தன் குடும்பத்தினருக்கும் ஓரிரு நண்பர்களுக்கும் சில சிறைப் படங்களை அனுப்பியுள்ளார். இதேபோல சிறைச் சாலையில் இருந்த சக கைதிகள் சிலருக்கும் படம் ஃபார்வேர்டு ஆகியுள்ளது. இந்த நிலையில்தான், சில மீடியாக்களில் சொகுசுப் படங்கள் வெளியாகின. ஆக, சிறைத் துறையின் சில அதிகாரிகள், ரிக்காஸின் நண்பர்கள், சென்னை போலீஸ்... இவர்கள்தான் புகைப்படத்தை ‘லீக்’ செய்தவர்கள்.

புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

‘‘முகமது ரிக்காஸ் வெயிட்டான பார்ட்டி. எனவே,  இவரது அறை பக்கம் சிறைக் காவலர்கள் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். இவரது பிளாக்கின் அருகே உள்ள மற்ற தண்டனைக் கைதிகளான முகமது ரபீக், முகமது ஜாகீர், ரஃபீக் நூருதீன், முகமது இப்ராஹிம் ஆகியோர் பகல் நேரங்களில் ரிக்காஸ் அறைக்கு வந்து பொழுதைக் கழித்துவந்தனர். இதைத் தடுக்க வேண்டிய ஒருங்கிணைந்த குற்றத்தடுப்புப் பிரிவு அமைதியாக இருந்துவிட்டு, இப்போது யோக்கியர்கள் போல நடவடிக்கை எடுப்பது பெரும் நடிப்பு’’ என்கின்றனர் சில வழக்கறிஞர்கள். இப்போது இந்தக் கைதிகள் ஐந்து பேரும் வெவ்வேறு சிறைகளுக்குத் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் சிறைவாசிகள் விடுதலைக்குழு வழக்கறிஞர் கேசவன், ‘‘தமிழகத்தில் உள்ள மத்தியச் சிறைகளில் புழல் சிறைதான் பெரியது. இந்தச் சிறையில் ஒருவர் விசாரணைக் கைதியாகவோ, தண்டனைக் கைதியாகவோ சிறைக்குள் செல்லும்போது நிர்வாணமாக சோதனைசெய்து அன்னாக்கயிற்றைக்கூட அறுத்து விட்ட பிறகுதான் சிறைக்குள் அனுமதிக்கிறார்கள். பிறகு எப்படி செல்போன் உள்ளே போகும்? உள்ளே உள்ள ஊழியர்கள், சில அதிகாரிகள் துணையின்றிச் சிறைக்குள் எதுவுமே நடக்காது’’ என்கிறார்.

புழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ!

போட்டோக்கள் வெளியானதன் பின்னணியில் அதிகாரிகளுக்குள் இருந்த அரசியலே பிரதானக் காரணம் என்று தெரியவந்துள்ளது. புழல் ஜெயிலில் உள்ள ஓர் அதிகாரிக்கும் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கும் உரசல் இருந்துகொண்டே வந்துள்ளது. ஜூன் மாதம் புழல் சிறையில் ரௌடி பாஸ்கர் முரளி என்பவர் படுகொலை செய்யப் பட்டார். அதற்கு சில நாட்களுக்கு முன்பே புழல் சிறை அதிகாரி, ‘பாஸ்கர் முரளியை இடமாற்றம் செய்யவேண்டும். அவரது உயிருக்கு ஆபத்து’ என மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். ஆனால், சிறைத்துறை தலைமையகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நாட்களில் ரௌடி பாஸ்கர் கொலை செய்யப்பட்ட பிறகு, ‘அவரை சிறை மாற்றம் செய்யாமல் இருந்ததுதான் கொலைக்குக் காரணம்’ என்று புழல் சிறை அதிகாரி அறிக்கை கொடுத்துள்ளார். அது, சில உயர் அதிகாரிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலில்தான், செல்போன்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆய்வு நடைபெற்ற போது, சிறை அதிகாரி அங்கு இல்லை. அவர் வீட்டிலிருந்து கிளம்பி வருவதாகத் தகவல் சொல்லியுள்ளார். அதற்குள் செல்போன்கள் கைமாறிவிட்டன. அந்த செல்போன்களில் இருந்த புகைப்படங்கள்தான் இப்போது வெளியாகியுள்ளன. இதைக் காரணமாக வைத்தே புழல் அதிகாரியை மாற்றுவதற்கான ஆணையும் தயாராகிவிட்டதாம். இப்போதைக்கு கீழ்நிலை அதிகாரிகள் எட்டு பேர் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர்.

புழல் சிறைக்குள் உயர் பாதுகாப்புப் பிரிவில் தான் ஜாமர் இருக்கிறதாம். மற்ற பகுதிகளில் இல்லை. அதேபோல், கோவை மத்தியச் சிறைச் சாலையின் வெளிவட்ட பாதுகாப்பு வளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் (சி.ஆர்.பி.எஃப்) படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால், சிறைச்சாலைக்குள் வெளியிலிருந்து செல்போன், போதைப்பொருட்கள் வருவது குறைந்துள்ளது. இதே பாணியில், புழல் சிறைச்சாலையிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை நிறுத்தவேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். சிறை அதிகாரிகள் சிலரின் பினாமிகள் பெயர்களில் வங்கிக் கணக்குகளில் வெயிட்டான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாம். வேறு சில அதிகாரிகளுக்கு ஃபாரீன் தங்க நகைகள், வெளிநாட்டு உயர்ரக மதுபானங்கள் எல்லாம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாம். கிளறினால், குட்கா வழக்கைவிட இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்கிறார்கள்.

- சூரஜ், அ.சையது அபுதாஹிர், இரா.தேவேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism