Published:Updated:

என்னாச்சு? என்னதான் ஆச்சு?

என்னாச்சு? என்னதான் ஆச்சு?
பிரீமியம் ஸ்டோரி
என்னாச்சு? என்னதான் ஆச்சு?

என்னாச்சு? என்னதான் ஆச்சு?

என்னாச்சு? என்னதான் ஆச்சு?

என்னாச்சு? என்னதான் ஆச்சு?

Published:Updated:
என்னாச்சு? என்னதான் ஆச்சு?
பிரீமியம் ஸ்டோரி
என்னாச்சு? என்னதான் ஆச்சு?

நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும், தீர்வு கிடைக்காத வழக்குகள் ’என்னாச்சு.. என்னதான் ஆச்சு?’

என்னாச்சு? என்னதான் ஆச்சு?

13 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அரசு உயர் அதிகாரி ஒருவரின் மனைவி, மகள் ஆகியோரைக் கடத்தி மானப்பங்கப்படுத்தி லட்சக்கணக்கில் பணம் பறித்தாக சதுர்வேதி சாமியார் மீது புகார் கிளம்பியது. கொதித்துப் போனார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. சதுர்வேதி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்தவர் அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். ஆன் லைனில் டூர் புரோகிராம் அறிவித்து, இந்தியா முழுக்க ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தி வரும் சதுர்வேதியை போலீஸாரால் (!) பிடிக்க முடியவில்லை. தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்திருக்கிறார்கள்.

என்னாச்சு? என்னதான் ஆச்சு?

பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார், 2011-ம் வருடம் ஐ.சி.எஃப் ரயில்வே காலனி குளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். தற்கொலை என வழக்கை ஊத்தி மூட முயன்றது காவல் துறை. ‘சாவில் மர்மம்’ எனக் குற்றச்சாட்டு எழ.. சி.பி.ஐ-க்கு போனது வழக்கு. அவர்களும் தற்கொலை எனச் சொல்ல... சங்கரசுப்பு மீண்டும் நீதிமன்றத்தில் போராடினார். சிறப்புப் புலனாய்வுக்குழு ஒன்று புதியதாக அமைக்கப்பட்டு, மகராஷ்டிரா முன்னாள் டி.ஜி.பி-யான சிவானந்தன், முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ராகவன், தடயவியல் நிபுணர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட சிலர் அதில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் விசாரணையில், கொலை என்று நீதிமன்றத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளனர். ஆனால் கொலையாளிகள் இன்னும் பிடிபடவில்லை.

என்னாச்சு? என்னதான் ஆச்சு?

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு. 2012 மார்ச் 29-ம் தேதி வாக்கிங் போனவர் பிறகு பிணமாகதான் கண்டெடுக்கப்பட்டார். குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் நீதிமன்றத்தில் வாய்தா... வாய்தா... என வாய் வலிக்க வாங்கி, காலத்தையும் தள்ளி, ஐந்து ஆண்டுகள் கழித்து, சி.பி.ஐ. வசம் வந்து சேர்ந்திருக்கிறது இந்த வழக்கு.

என்னாச்சு? என்னதான் ஆச்சு?

2009-ம் ஆண்டு நடந்த பயங்கரம் இது. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் புறப்பட இருந்த மின்சார ரயிலை மர்ம மனிதன் கடத்தினான். வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் நான்கு பேர் பலியானார்கள். மர்ம நபர் உடலில், தெலுங்கு மொழியில் பச்சை குத்தியிருந்தார். துப்பு துலங்க காவல் துறை பரிசு எல்லாம் அறிவித்தும் இந்த விபத்தின் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழவில்லை.

என்னாச்சு? என்னதான் ஆச்சு?

2016, ஆகஸ்டில் சேலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட,  5.75 கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளை போனது. காவல்துறை, தடய அறிவியல் துறை, ரிசர்வ் வங்கி என பலரும் பல வகைகளில் துருவியபோது துரும்புகூட கிடைக்கவில்லை. கடைசியில் இஸ்ரோ உதவியை நாடினார்கள். சாட்டிலைட் போட்டோ கிடைத்து, பணம் எந்த இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது என்கிற விவரமும் தெரிந்து குற்றவாளிகளை நெருங்கியும் விட்டார்கள் என புது செய்தி சொன்னார்கள். ஆனால் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.

தொகுப்பு: எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி