மனிதத்தன்மையற்ற கொலைவெறித் தாக்குதல்கள் அதிகம் நடைபெறும் பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் விரைவில் சேர்ந்துவிடும் போலிருக்கிறது. திருவண்ணாமலையில் கோயிலுக்கு வழிகேட்ட மூதாட்டியை அடித்துக் கொன்றது, பழவேற்காட்டில் ஊருக்குள் சுற்றித் திரிந்த நபரை அடித்துக் கொன்றது என நடந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக கரூரில் நிகழ்ந்தது கொடூரத்தின் உச்சம். 15 வயது சிறுவனை, செல்போனைத் திருடியதாக ஊர் நடுவே கட்டி வைத்து கண்களிலும் வாயிலும் மிளகாய்ப் பொடியைத் தடவி, உருட்டுக்கட்டையால் கொடூரத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்திருக்கிறார்கள். இதைச் செய்தவர்கள், அந்தச் சிறுவனை குழந்தைப் பருவத்திலிருந்து நன்கு அறிந்த அக்கம்பக்கத்தினர் என்பதுதான் மிகப் பெரிய அதிர்ச்சி!

கரூர் அருகே தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது அல்லாலி கவுண்டனூர். இந்த ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி-இளஞ்சியம் தம்பதிக்கு பாலசுப்பிரமணியன், நந்தினி என்று இரு குழந்தைகள். பழனிச்சாமி சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். 15 வயது சிறுவனான பாலசுப்ரமணியம், குடும்பச்சூழல் காரணமாகப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான். இந்தச் சூழலில்தான், இப்படி ஒரு கொடூர சம்பவத்துக்கு இரையாகியிருக்கிறான்.

துக்கமும் அதிர்ச்சியும் விலகாமல் முடங்கிக்கிடந்த இளஞ்சியத்தைச் சந்தித்தோம். துக்கத்தில் வார்த்தைகள் வராமல் துடித்தவர், ஒருகட்டத்தில் வெடித்துக் கொட்டித்தீர்த்தார். ‘‘புருஷன் இறந்த பிறகு ஒத்தையாளா கூலி வேலைக்குப் போய் ரெண்டு புள்ளைங்களையும் வளர்த்தேன். பாலு எட்டாவதோட படிப்பை நிறுத்திட்டான். ஊருல சும்மா திரிஞ்சிட்டிருந்ததால, யாரு பொருள் காணாமப்போனாலும் இவனை சந்தேகப்பட்டு அடிப்பாங்க. அப்படித்தான் அன்னைக்கும் பக்கத்து வீட்டுக்காரர் முனியாண்டி, அவரோட செல்போனை காணோம்னு சொல்லி பாலுவை இழுத்துட்டுப் போனாரு. அவன், ‘நான் எடுக்கலை’ன்னு சத்தியம் செஞ்சான். அப்பவும் நம்பாத முனியாண்டி, அவரின் கூட்டாளிங்க மணிவேல், முனியப்பன், செல்வகுமார், பழனிச்சாமின்னு நாலு பேரை அழைச்சுட்டுவந்து என் மகனை கம்பத்துல கட்டி வச்சாங்க. டிரஸ்ஸைக் கிழிச்சு அம்மணமாக்கினாங்க. ‘என் மகனை விட்டுருங்க’ன்னு நானும் என் மகளும் கால்ல விழுந்து கதறினோம். எங்களைக் கடுமையா மிரட்டித் துரத்திட்டாங்க. அண்ணன் மேல இருந்த பாசத்தால என் பொண்ணு ஒளிஞ்சு நின்னு என்ன நடக்குதுன்னு பார்த்திருக்கா. ஆம்பிளையாளுங்க மட்டுமில்லாம, சில பொம்பளைங்களும் என் மகனை அடிச்சிருக்காங்க. அப்பவும் அவன், ‘நான் திருடலை’ன்னு முனகி இருக்கான். ஆனா, இரக்கமே இல்லாம மிளகா பொடியை அவன் கண்ணு, வாயின்னு உடம்பெல்லாம் தடவி, உருட்டுக்கட்டையால கடுமையா தாக்கியிருக்காங்க.

என் மகன் சித்ரவதை தாங்காம ‘அய்யோ... அம்மா’ன்னு கத்தித் துடிக்குற குரல் தூரத்துல கேட்குது. ஆனாலும் என்னை ஒண்ணுமே பண்ண முடியாத பாவியாக்கிட்டானுங்க. ராத்திரி பத்து மணியாகிடுச்சு. நான் ஊர்ல வீடு வீடா போய் கதவைத் தட்டி, என் மகனை காப்பாத்தச் சொல்லிக் கெஞ்சிக் கதறுனேன். அவனுங்களுக்கு பயந்து ஒருத்தரும் வரலை. ராத்திரி 12 மணி வரைக்கும் என் குழந்தையை அடிச்சு தொவைச்சவனுங்க, அப்புறம் போயிட்டானுங்க.

நான் பதறியடிச்சிட்டுப்போய் மயங்கிக் கிடந்த மகனைத் தூக்குறேன். தலை தொங்கிப்போச்சு. அவன் மூச்சு நின்னுப் போயிருந்துச்சு. ‘பாலு... டேய் பாலு... எந்திரிடா’ன்னு கதறித் துடிக்கிறேன். ‘இத்தனைப் பேரு இருந்தும் என்னைக் காப்பாத்த யாருமே வரலையேம்மா’ங்கிற மாதிரி அவன் கண்ணு அசைவில்லாம என்னை வெறிச்சுப் பார்க்குது. அவன் செத்துப்போயிட்டாங்கிறதையே நம்ப முடியாம விடிய விடிய அவனை மடியில போட்டு அழுதிட்டிருந்தேன்...” என்றவர் நொறுங்கிப்போய் கதறுகிறார்.

இதுதொடர்பாக மறுநாள் நடவடிக்கை எடுத்த போலீஸார் முனியாண்டி, மணிவேல், முனியப்பன், செல்வகுமார், பழனிச்சாமி ஆகிய ஐந்து பேரை கைது செய்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். “பாலசுப்ரமணியன் சின்ன சின்னதா திருடுற பயதான். செல்போனை திருடினானான்னு தெரியாது. அப்படியே இருந்தாலும் அவனை அடிச்சே கொன்னது கொடுமைங்க” என்றவர்களிடம், “நீங்களாவது சென்று காப்பாற்றியிருக்கலாம்தானே” என்று கேட்டோம். ஒருவரிடமும் பதில் இல்லை.

வழக்கை விசாரிக்கும் வெள்ளியணை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகரனிடம் பேசினோம். “முனியாண்டி பக்கத்து ஊருல இருந்து டூவீலரில் ஊருக்கு வந்திருக்கிறார். வர்ற வழியில இந்தப் பையனை பார்த்து வண்டியில ஏத்தியிருக்கார். நடுவுல செல்போன் காணாமப் போயிடுச்சு. அதை இவன்தான் திருடியிருப்பான்னு கட்டி வெச்சு அடிச்சே கொன்னுருக்காங்க. ஊருல இருந்து யாராச்சும் ஒருத்தராவது எங்களுக்கு ஒரு போன் போட்டிருந்தா ஓடிப்போயி காப்பாத்தியிருப்போம். அநியாயமா கொன்னுட்டாங்க...” என்றார் கவலையுடன்.

குழந்தையிலிருந்தே தங்கள் கண்முன்னே வளர்ந்த சிறுவனின் உயிரைவிட ஒரு செல்போன் முக்கியமாகப் போய்விட்டது எனில், எங்கே போய்க்கொண்டிருக்கிறது நம் சமூகம்? பதிலைத் தேட வேண்டிய சமூகக் கடமை நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது!

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்