Published:Updated:

வேலூரில் ஆட்டோ டிரைவரால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

வேலூரில் ஆட்டோ டிரைவரால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!
வேலூரில் ஆட்டோ டிரைவரால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

வேலூரில் மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் பலவன்சாத்துகுப்பத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மாணவி மீனா (19), (பெயர் மாற்றம்). இவர், வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டி.கே.எம் மகளிர் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். தினமும் காலை, மாலை சாய்நாதபுரம் முத்துசாமி முதலியார் தெருவில் வசிக்கும் மணிவண்ணன் (49) என்பவருடைய ஆட்டோவில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்த மாணவியிடம், அந்த ஆட்டோ டிரைவர் நெருக்கமாகப் பழக திட்டமிட்டுள்ளார்.

‘எங்கேயாவது வெளியே செல்லலாம்’ என்று அடிக்கடி மாணவியை வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் ஆட்டோ டிரைவரின் அசிங்கமான மன ஓட்டத்தை மாணவி அறியவில்லை. வெகுளியாகப் பழகுவதாக நினைத்தார். கடந்த 12-ம் தேதி ‘அமிர்தி வனப்பூங்காவுக்குப் போகலாம்’ என்று மாணவியைக் கட்டாயப்படுத்தியுள்ளார் ஆட்டோ டிரைவர் மணிவண்ணன்.  மாணவி வர மறுத்ததால், ஆட்டோவில் வைத்தே மணிவண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆட்டோ டிரைவரின் அத்துமீறலைத் தன் பெற்றோரிடம் கூறி மாணவி அழுதார். உடனடியாக பெற்றோர், போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மணிவண்ணனை இன்று கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.