Published:Updated:

வாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்த விவகாரம்! கைதானவர்களுக்கு நீதிமன்ற காவல்

வாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்த விவகாரம்! கைதானவர்களுக்கு நீதிமன்ற காவல்
வாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்த விவகாரம்! கைதானவர்களுக்கு நீதிமன்ற காவல்

சமூக வலைதளங்களில் பிற சமூகப் பெண்களை இழிவாகப் பேசிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரின் காவலை வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்த விவகாரம்! கைதானவர்களுக்கு நீதிமன்ற காவல்

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் என்ற கிராமத்தில் டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தன்று அன்பழகன் என்பவர் சில சமூக பெண்களை காதலித்து திருமணம் செய்வோம் என்று சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பிற சமூக பெண்களை திருமணம் செய்தால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக 9-ம் தேதி அன்று கடம்பத்தூர் ஒன்றிய பா.ம.க செயலாளர் வினோத் குமார் என்பவர் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் குறிப்பிட்ட சமூகப் பெண்களை அவதூறாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அது தொடர்பாக அன்றைய தினம் நள்ளிரவு மப்பேடு போலீஸார் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சாலமன், அன்புராஜ், வினோத் என்ற மூன்று பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். வீடியோ வெளியிட்ட அன்பழகன் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

அவரைப் பிடிக்க காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சம்பந்தமில்லாத இந்த மூன்று பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூவரையும் நேற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீஸார் மனு செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுபாஷினி ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து இருந்தார். ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை 5 மணிக்கு நீதிபதி சுபாஷினி வீட்டில் அவர்கள் மூவரையும்  ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மூவரையும் வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

வாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்த விவகாரம்! கைதானவர்களுக்கு நீதிமன்ற காவல்

அப்போது பேசிய கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரான சாலமன், ``அன்பழகன் வெளியிட்ட வீடியோவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் தீர விசாரிக்காமல் அபாண்டமாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து எங்களைக் கைது செய்தனர்.சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகி விட்டார்.

ஆகவே போலீஸார் எங்களை வன்மத்தோடு எங்களை நடத்தினார்கள். எங்களை உட்காரக் கூட வைக்க அனுமதிக்காமல் நாற்காலியும் தராமல் ஐந்து மணி நேரம் நிற்க  வைத்திருந்தனர். இது தொடர்பாக நாங்கள் மேஜிஸ்திரேட்டிடம் முறையிட்டோம். எங்களது ஜாமீன் மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும். அன்று எங்களுக்கு பிணை கிடைத்தவுடன் எங்களை போலீஸார் எப்படி நடத்தினார்கள் என்பது தொடர்பாக விரிவாகப் பேசுவோம்" என்று தெரிவித்தார். பின்னர் மூவரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.