Published:Updated:

போலி மார்க் ஷீட் கொடுத்து பணியில் சேர்ந்த நூலகர்! ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

வாலாஜாவில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த நூலகர், ஒன்றரை ஆண்டு பணியில் நீடித்த பிறகு சிக்கியுள்ளார்.

வேலூர் மாவட்டம் வாலாஜா அனந்தலையில் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் நூலகராக லோகநாதன் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டாக பணியாற்றி வருகிறார். நூலகர் பணிக்கு ப்ளஸ் டூ தேர்ச்சியுடன் நூலகம் சம்பந்தப்பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். நூலகராக லோகநாதன் பொறுப்பேற்றபோதே அவருடைய ப்ளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் சென்னையில் உள்ள தேர்வுத் துறை இயக்குநரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒன்றரை ஆண்டு காலதாமதத்துக்குப் பிறகு, தற்போது அவரின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. அதில், போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து லோகநாதன் பணியில் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி தேர்வுத் துறை அதிகாரிகள், வேலூர் மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தனுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர், போலிச் சான்றிதழ் கொடுத்து அனந்தலை நூலகராகப் பணியாற்றி வரும் லோகநாதன் மீது வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.