Published:Updated:

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை’ - இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை’ - இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்
சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை’ - இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது திருப்பூர் நீதிமன்றம்.

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை’ - இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்

திருப்பூரில் கடந்த 2016-ம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பர் புதியதாக பைக் வாங்கியதற்காக ட்ரீட் கேட்டிருக்கிறார். அதனால் அந்தச் சிறுமியை தன்னுடைய பைக்கில் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றிய அந்த ஆண் நண்பர், இறுதியாக கோல்டன் நகர் என்ற பகுதியில் உள்ள முட்புதர் அருகே சிறுமியை அழைத்துச் சென்று தனிமையில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அந்தப் புதரின் அருகே மதுபோதையில் அமர்ந்திருந்த 3 நபர்கள் அவர்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள். மேலும், அந்தச் சிறுமியின் நண்பரை அடித்து துரத்திவிட்டு, 3 பேரும் சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

இந்தத் தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புகார் குறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், அருண்குமார் என்ற பனியன் தொழிலாளியையும், அவருடன் 2 சிறுவர்களையும் பிச்சம்பாளையம் என்ற பகுதியில் வைத்து கைது செய்தனர். அந்த 2 சிறுவர்கள் மீதான வழக்கு சிறார் கூர்நோக்கு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பனியன் தொழிலாளி அருண்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கானது திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், பனியன் தொழிலாளி அருண்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு நேற்று அவருக்குத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அருண்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.