Published:Updated:

`பெரியகுளத்தில் ஒரே நாளில் 3 கொள்ளைச் சம்பவங்கள்’- மர்மக் கும்பலால் பொதுமக்கள் அச்சம்

`பெரியகுளத்தில் ஒரே நாளில் 3 கொள்ளைச் சம்பவங்கள்’- மர்மக் கும்பலால் பொதுமக்கள் அச்சம்
`பெரியகுளத்தில் ஒரே நாளில் 3 கொள்ளைச் சம்பவங்கள்’- மர்மக் கும்பலால் பொதுமக்கள் அச்சம்

 தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்களுக்கு மத்தியில், நேற்று ஒரே நாளில், பெரியகுளம் வட்டாரத்தில் மூன்று இடங்களில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது பெரியகுளம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம்  பெரியகுளம் அருகே நல்ல கருப்பன்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - செல்வி தம்பதி வீட்டில் குழந்தைகளுடன் இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் மொட்டை மாடி வழியாக வீட்டுக்குள் வந்து, தூங்கிக்கொண்டிருந்த செல்வியின் கழுத்தில் இருந்த 3 பவுன்  தங்கச் சங்கிலியைப் பரித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் செல்வம் என்பவர்களுக்குச் சொந்தமான கொடிக்கால்  தோட்டத்தில் மின் மோட்டார் மற்றும் வயர்களை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது ஒருபுறம் என்றால், பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (52). இவர்  குடும்பத்துடன்  திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு முருகனின்  வீட்டின்  பூட்டை  உடைத்த  மர்ம நபர்கள், வீட்டிலிருந்த நகை, பணம் மற்றும் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த 3 சம்பவங்களும் பெரியகுளம் வட்டார பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகத் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவரும் அந்த மர்மக் கும்பல் யார், அவர்களை ஏன் போலீஸார் பிடிக்கவில்லை என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், போலீஸாருக்கும் அந்த மர்மக் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுப்புகின்றனர்.