Published:Updated:

அர்ஜுன் சம்பத்தைக் கொலை செய்ய சதி! - கைதானவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு

அர்ஜுன் சம்பத்தைக் கொலை செய்ய சதி! - கைதானவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு
அர்ஜுன் சம்பத்தைக் கொலை செய்ய சதி! - கைதானவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு

கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா மாநில தலைவர் அன்பு மாரி ஆகியோரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா மாநிலத் தலைவர் அன்பு மாரி ஆகியோரைக் கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த ஜாபர், இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன் ஆகியோரும், கோவையைச் சேர்ந்த ஆசிக், பைசல், சாகுல் என்பவர்களையும் வெரைட்டி ஹால் போலீஸார் கைது செய்தனர். இந்த ஏழு பேர் மீதும்  சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த சதி திட்டம் தீட்டிய  வழக்கின் பின்னணியில் பல்வேறு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு  மாற்றப்பட்டது. இதையடுத்து, கோவையில் கைதான மூன்று பேர் வீடுகளிலும் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள ஆசிக் என்பவரின் வீடு, உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்  பைசல் ஆகியோரின் வீடு, குனியமுத்தூர் பகுதியில் உள்ள சாகுல் வீடு ஆகிய மூன்று இடங்களில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு கோவை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சோதனையில் தற்போது வரை செல்போன் லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.