Published:Updated:

கருக்கலைப்பு செய்த காதலி; கைவிட்ட காதலன்! - இளம்பெண் புகாரால் சிக்கிய பெண் டாக்டர்

கருக்கலைப்பு செய்த காதலி; கைவிட்ட காதலன்! - இளம்பெண் புகாரால் சிக்கிய பெண் டாக்டர்
கருக்கலைப்பு செய்த காதலி; கைவிட்ட காதலன்! - இளம்பெண் புகாரால் சிக்கிய பெண் டாக்டர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துவந்த டாக்டர் சுகந்தி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருவண்ணாமலையில் பட்டம் படித்த டாக்டர் முதல் படிக்காத போலி டாக்டர் வரை பாரபச்சமின்றி சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு கைது ஆவது மாவட்டத்துக்கே தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. கைது ஆனாலும், ஜாமீனில் வெளியே வந்து அதே தொழிலை செய்கிறார்கள். இந்த நிலையில் ஆனந்தி என்ற பெண் சென்ற 20 நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த நெருப்பே அணையாத நிலையில், பட்டம் படித்த டாக்டரே இந்தச் செயலை செய்தது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் ஆனது மக்களுக்கு.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சுகந்தி க்ளினிக் என்ற பெயரில் க்ளினிக் ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் க்ளினிக்கை நிர்வகிப்பவர் சுகந்தி என்ற மகப்பேறு டாக்டர்தான் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு கைது ஆகியுள்ளார். போளூர் அடுத்த கடலாடி கிராமத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத பெண் மலர்கொடி (26) (பெயர் மாற்றப்பட்டது) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. மலர்க்கொடியை ராமராஜ் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இதில் கருவுற்ற மலர்க்கொடியை அழைத்துக்கொண்டு சுகந்தி டாக்டரிடம் கருக்கலைப்பு செய்துள்ளார். 

அதன் பிறகு, உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறிவிட்டு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால், மலர்க்கொடியோ போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அங்கிருந்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்  குழுவுக்குப் புகார் சென்றது. அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி கருக்கலைப்பு செய்தாக கூறப்படும் க்ளினிக்கு நேற்று இரவு சென்று சோதனை செய்தார். அங்கு மலர்க்கொடிக்கு கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. அங்கிருந்து கருக்கலைப்பு செய்வதற்கான ஊசி மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. 

அதோடு அங்கு மருத்துவம் பார்க்க வந்த நோயாளிகளின் விவரங்கள் ஏதும் பதிவு செய்யப்படாமல் இருந்தது. அதோடு முறையாகச் செவிலியர் படிக்காத 8 பெண்களை வைத்து நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்கு குளுகோஸ் போடுவதற்கு மற்றும் மாத்திரைகள் கொடுக்கச் சொல்லுவதற்கு வேலைக்கு வைத்துள்ளார். 

இதுகுறித்து நீதிபதி மகிழேந்தி கூறுகையில், ``டாக்டருக்கு படித்தவர் கருக்கலைப்பு செய்வதற்கு முறையான அங்கீகாரம் வாங்காமல் கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். அதுவும் திருமணம் ஆகாத பெண்ணுக்கு சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துள்ளார். இங்கு மருத்துவம் பாக்கவந்தவர்களின் எந்த விவரங்களும் முறையாக இல்லை. இதுபோன்ற சட்ட விரோத கருக்கலைப்பு பல ஆண்டுகளாகச் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. தற்போது சுகந்தியைக் கைது செய்துள்ளோம். விசாரணைக்குப் பின்பு கடுமையான தண்டனை இவர் மீது பாயும்" என்றார்.