'மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும்’ என்பது பழமொழி. இதுவரை ரசிகர்கள், 'மன்றத்துக்கு வாங்க தலைவா...’ என்று மன்றாடியபோது எல்லாம் ரஜினிகாந்த் தட்டிக்கழித்தார். ஆனால், அண்ணா ஹஜாரே ஆதர வாளர்களின் உண்ணாவிரதத்துக்காக இலவசமாக மண்டபம் கொடுத்து... மீண்டும் அரசியல் பரபரப்பை பற்ற வைத்துள்ளார். போராட்டத்தில் ரஜினி பங்கேற்காத குறையை, அவரது மண்டபம் தீர்த்து வைத்துள்ளது. ஆக, பூனைக்கு மணி கட்டியாச்சு!

ராகவேந்திரா மண்டபத்தை தற்போதுதான் முழுமையாக குளுகுளு வசதியுடன் நவீனமாக்கி இருக்கிறார். மண்டபத்தில் பின் பகுதியை, இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வாடகைக்கு விடும் வழக்கம் இல்லை. ஆனால் முதன்முறையாக, ஹஜாரே ஆதரவாளர்களின் மூன்று நாள் உண்ணாவிரதத்துக்காக இலவசமாகக் கொடுத்து இருக்கிறார், ரஜினி.

பொதுவாகவே ராகவேந்திரா மண்டபத்தில் ஏதேனும் திருமணம் நடந்தால், அந்தப் பக்கம் எட்டிப்பார்க்காமல் தவிர்த்துவிடுவது ரஜினியின் வழக்கம். ஆனால், உண்ணாவிரதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை 'இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்’ ராகவேந்திரா மண்டபத்தில் செய்து வந்த 26-ம் தேதி மாலை திடீரென்று ஆஜரானார் ரஜினி. 'உங்களுக்குத் தேவையான வசதி இருக்கா... கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றீங்களா?’ என்று அன்போடு கேட்டு, ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். அதற்குள் கூட்டம் கூடிவிடவே எஸ்கேப் ஆகிவிட்டார் ரஜினி. உண்ணாவிரத அமைப்பாளர் ஜாகீர் ஹசைனிடம் பேசினோம்.

''பொது இடங்களில் உண்ணாவிரதம் இருக்க அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. அதனால்தான்,

தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நாங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டி இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அடையாறு எல்.பி. சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி தானாகவே முன்வந்து அவருக்குச் சொந்தமான மண்டபத்தில் இடம் தந்து உதவி இருக்கிறார். அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. ஊழலுக்கு எதிரான குருஷேத்திரத்தில் ரஜினி சாரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது, எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது...'' என்று புன்னகை பூத்தார்.

''ரஜினி ஓர் அறிக்கை விட்டால், அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்க ஹஜாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்திருப்பார்களே...?''

''இதை ரஜினி சாரிடமே கேட்டோம். 'கொஞ்சம் கொஞ்சமாக போராட்டம் தீவிரமாகட்டும். அவசரம் வேண்டாம்’ என்ற்£ர். ரஜினி சொன்னார் என்பதற்காக, அவரது ரசிகர்கள் கண்மூடித்தனமாக எங்களை ஆதரிப்பதை விரும்ப வில்லை. ஊழலுக்கு எதிராக அவர்களே திரண்டு வரவேண்டும்.''

''உண்ணாவிரதத்தில் ரஜினி ஏன் கலந்து கொள்ளவில்லை?''

''உண்ணாவிரதத்தில் கலந்து கொள்கிற ஆர்வம் ரஜினி சாரிடம் இருக்கிறது. ஆனால் உடல்நிலை அடிக்கடி சரியில்லா மல் போவதால், அவரால் இருக்க முடிய வில்லை. உண்ணா நோன்புக்கு நிறைய சினிமா நடிகர்கள் எங்களைத் தேடிவந்து, ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பு அடைவதற்கு ரஜினிதான் முக்கியக் காரணம்'' என்றார்.

'ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபம், கறுப்புப் பணத்தில் கட்டப்பட்டதுதான்’ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எகிறி இருப்பது ரஜினி ரசிகர்களை அதிக கோபம் கொள்ள வைத்துள்ளது. இதுகுறித்துக் கேட்க ரஜினி ரசிகர் மன்றப் பொறுப் பாளர் சுதாகரைத் தொடர்பு கொண்டோம். முதலில் என்ன விஷயம் என்று ஆர்வமாகக் கேட்டவர், கறுப்புப் பணம் தொடர்பான கேள்வி என்றதும், பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டார். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ராமதாஸ், ''ரசிகர்கள் எல்லோரும் இளங்கோவன் மேலயும், காங்கிரஸ் மேலயும் கடுமையான கோபத்துல இருக்காங்க. இளங்கோவன் கொடும்பாவியை எரிக்கலாம்னு திட்டம் போட்டோம். ஆனா, 'அமைதியா இருங்க’ன்னு தலைமையில இருந்து உத்தரவு போட்டுட்டாங்க. ரஜினியைப் பற்றி இளங்கோவனுக்கு என்ன தெரியும்?'' என்று கொந்தளித்தார். இளங்கோவன் எங்கு சென்றாலும் எதிர்ப்புக் காட்ட ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகிறார்களாம். ரஜினி சும்மா இருந்தாலும் அவரை சும்மா இருக்க விடமாட்டார்கள் போல!

- எம். குணா

படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

''முறையான கணக்கு இருக்கிறதா?''

ரஜினி விவகாரம் குறித்து நாகர்கோவிலில் நடந்த கூடங்குளம் அணு உலை ஆதரவுக் கூட்டத்துக்கு வந்திருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டோம்.

''ரஜினி, தமிழ்த் திரையுலகின் ஈடு இணையற்ற மிகப் பெரிய நடிகர். சமீபத்தில் கூட அவர் நடிப்பில் வெளி வந்த, 'சிவாஜி’, 'எந்திரன்’ போன்ற படங்கள் பெரும் வெற்றி அடைந்து வசூலையும் வாரிக் குவித்திருக்கின்றன. இதற்கெல்லாம் முறையான வரவு, செலவுக் கணக்குகள் அந்தப் படங்கள் தொடர்புடையவர்கள் வசம் இருக்கிறதா? இதில் கறுப்புப் பணத்துக்குத் தொடர்பே இல்லையா என்பதுதான் என் கேள்வி. இதையெல்லாம் வருமானவரித் துறையினர்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். அப்படி கறுப்புப் பணம் பயன்படுத்தப்படவே இல்லை என்றால் அதை வரவேற்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்'' என்றார்.

- என்.சுவாமிநாதன்