Published:Updated:

`ரசாயனம் தடவிய வாழைப்பழம் விற்பனை’- கடலூர் உழவர் சந்தையில் அதிரடிகாட்டிய அதிகாரிகள்

`ரசாயனம்  தடவிய வாழைப்பழம் விற்பனை’- கடலூர் உழவர் சந்தையில் அதிரடிகாட்டிய அதிகாரிகள்
`ரசாயனம் தடவிய வாழைப்பழம் விற்பனை’- கடலூர் உழவர் சந்தையில் அதிரடிகாட்டிய அதிகாரிகள்

கடலூர் உழவர் சந்தையில் ரசாயனம்  தடவி விற்பனை செய்யப்பட்ட வாழைப்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூர் உழவர் சந்தையில் கடலூர் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயலில் பயிரிடப்பட்ட காய்கறிகள், பழங்கள், பூ ஆகியவற்றை எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு சில வியாபாரிகள் வாழைப்பழங்களை ரசாயனம்  தடவி பழுக்கவைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து கடலூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் இன்று உழவர் சந்தையில் விற்கப்படும் வாழைப்பழங்களை ஆய்வு செய்தனர்.

இதில் வாழைப்பழங்களைப் பழுக்கவைக்க ரசாயனம் தடவியுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரசாயனம் தடவிய 30-க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய ரசாயன பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழம் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரசாயனம் தடவிய வாழைப்பழங்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.