Published:Updated:

‘நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குன்றத்தூர் அபிராமி’ - வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைப்பு

JAYAVEL B
‘நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குன்றத்தூர் அபிராமி’ - வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைப்பு
‘நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குன்றத்தூர் அபிராமி’ - வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைப்பு

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கிற்காகக் குன்றத்தூர் அபிராமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கறிஞர் வராததால் வழக்கை ஜனவரிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

குன்றத்தூர் அபிராமிக்கு அவ்வளவாக அறிமுகம் தேவை இருக்காது.  பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை ஈவு இறக்கமின்றி விஷம் கொடுத்து கொன்ற கொடூரத்தை அரங்கேற்றியவர். இவரது கணவர் விஜயுடன் வாழ்ந்து கொண்டே அதே பகுதியில் இருக்கும் பிரியாணி கடையில் பணியாற்றிய சுந்தரம் என்பவருடன் தகாத உறவு வைத்திருந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கணவனை கைவிட்டுவிட்டு, சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். தனது இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு தலைமறைவானார்.

தலைமறைவான அபிராமியை நாகர்கோயிலில் காவல்துறையினர் கைது செய்தனர். ‘கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றதாக அபிராமி கொடுத்த வாக்கு மூலம் ஊடகங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக நேற்று அவரைக் காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்குக் காவல்துறையினர் அழைத்து வந்தனர். அபிராமியின் வழக்கறிஞர் வராததால் வழக்கை ஜனவரி 2ம் தேதிக்கு நீதிபதி கருணாநிதி ஒத்திவைத்துள்ளார்.