Published:Updated:

1 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 2 பேர் கைது

1 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 2 பேர் கைது
1 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

1 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கணபதிபாளையம் சோதனைச் சாவடியில் நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்தி விசாரித்ததில், அந்த காரில் இருந்த 2 நபர்களும் தங்களைப் பற்றிய முன்னுக்குப்பின் முரணான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்கள் ஓட்டிவந்த காரை முழுமையாக சோதனையிட்டனர். அப்போது காருக்குள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெருமளவு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், உடனடியாக இருவரையும் தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையில் இறங்கினர்.

அதில், கோவையைச் சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் பிரதீஷ் ஆகிய இருவரும் கோவையிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புகொண்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதுரையில் உள்ள பார்ட்டிகளிடம் கை மாற்றுவதற்குச் சென்றதாகவும், ஆனால் திட்டம் சொதப்பியதால் வேறு வழியின்றி பணக்கட்டுகளுடன் மீண்டும் கோவையை நோக்கி வந்துகொண்டு இருந்தபோது காவல்துறையிடம் அவர்கள் மாட்டிக்கொண்டதாகவும் தெரிய வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த தாராபுரம் காவல்துறையினர் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளையும், அவர்கள் ஓட்டிவந்த காரையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பற்றியும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.