Published:Updated:

தவறான நட்பால் பறிபோன பெண்ணின் உயிர்! - தூக்கில் தொங்கிய காதலன்

லோகேஸ்வரன்.கோ
தவறான நட்பால் பறிபோன பெண்ணின் உயிர்! - தூக்கில் தொங்கிய காதலன்
தவறான நட்பால் பறிபோன பெண்ணின் உயிர்! - தூக்கில் தொங்கிய காதலன்

நாட்றம்பள்ளியில் விதவைப் பெண் கொலையில் தேடப்பட்டு வந்த காதலன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி சுண்ணாம்புக்குட்டையைச் சேர்ந்தவர் வளர்மதி (50). கணவரை இழந்த இவர், தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். ஒரு மகன் ராணுவ வீரர். மற்றொரு மகன் படித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன்பு மலைப் பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற வளர்மதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் (42) என்பவருடன் வளர்மதிக்குத் தொடர்பிருந்தது தெரியவந்தது. அவரைத் தேடியபோது தலைமறைவாகியிருந்தார். எனவே, காதலியைச் சிவலிங்கம் கொன்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டைத் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சுண்ணாம்புக்குட்டை மாந்தோப்பில் இருக்கிற மரத்தில் சிவலிங்கம் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.

இதுபற்றி தகவலறிந்து வந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து சிவலிங்கம் கொல்லப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.