தோழர் ராவுன்னி. முண்டூர் ராவுன்னி என்றால் கேரள அரசியல் தலைவர்கள் மத்தியில் பிரபலம். மார்க்சிய லெனினிய இயக்கத் தலைவர்களில் முக்கியமானவர். பி.ராமமூர்த்தி, வெங்கட்ராமன், வி.பி.சிந்தன் போன்ற தமிழக மார்க்சிஸ்ட் தலைவர் களுடன் இணைந்து பணியாற்றியவர். 'நக்சலைட்’ என்று அடையாளம் காணப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். பத்திரிகையாளர். தன்னுடைய 'போராட்டம்’ அமைப்பின் மூலம் சிவப்புச் சிந்தனைகளைப் பரப்பியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து போராடியும் வருபவர். முல்லைப்பெரியாறு பிரச்னை கொதிநிலையை அடைந்து வரும் நேரத்தில், தமிழகம் வந்திருந்த அவரைச் சந்தித்தோம்.

''சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய இரண்டு கட்சிகள் நம் நாட்டில் இருக்கும் போது சி.பி.ஐ.(எம்.எல்), நக்சல்பாரி போன்ற இயக்கங்கள் நிறுவப்பட்டதற்கான அவசியம் என்ன என்று கருதுகிறீர்கள்?''

''1962 வரைக்கும் சி.பி.ஐ. மட்டும்தான் இருந்தது. நான் அப்போது சென்னையில் மின்சார வாரியத்தில் பணியில் இருந்தேன். அன்று பொதுவுடைமைக் கொள் கைகள், கோட்பாடுகள் பற்றி நல்ல புரிதல் இருந்தது. கட்சிக்குள் இருந்த கொள்கை ரீதியான குழப்பங்களின் விளைவுகளை எல்லாம் நாங்கள் தொழிற்சங்கத்தில் சந்தித்திருக்கிறோம். கம்யூனிஸ்ட் கொள்கைகள் பற்றி மக்களுக்குப் புரிதல் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே 'தீக்கதிர்’ ஆரம்பிக்கப்பட்ட சமயம், கேரளாவில் 'சிந்தா’, ஆந்திராவில் 'ஜனசக்தி’, வங்கத்தில் 'கனஷக்தி’ என்று பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. சீனப் போருக்குப் பின், கொள்கை சார்ந்து கட்சிக்குள் பிரிவு ஏற்பட்டது. அப்போது தொடங்கப்பட்டதுதான் சி.பி.எம். அதன்பிறகு மார்க்சிஸ்ட் கொள்கைகளுடன் லெனினியப் பார்வைகளையும் சேர்த்துக்கொண்டு எம்.எல். இயக்கங்கள் பிறந்தன. நாடு சுதந்திரம் அடைந்து 60 வருடங்களில் சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய இரண்டினாலும் எந்த ஒரு மேம்பாட்டையும் கொண்டு வரமுடியவில்லை. இன்று அவை கொள்கை அளவில் சீரழிந்து போய்விட்டன. கேரளாவில் ஒரு ஏரியா கமிட்டி கட்சி அலுவலகத்தின் மதிப்பு 15 லட்சம் ரூபாய். அந்தக் கட்சிகளுக்கு 4,000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்று அரசே சொல்கிறது. என்றால், அவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகள்தானா?''

''கம்யூனிஸ்ட்’ அச்சுதானந்தன், 'காங்கிரஸ்’ உம்மன் சாண்டி... உங்கள் பார்வையில் எப்படி?''

'' தத்துவார்த்த ரீதியாகச் சொன்னால் அச்சுதானந்தனும் ஒரு வலதுசாரிதான். தீவிர இடதுசாரி போன்ற ஒரு பிம்பம் அவர் மீது இருக்கிறது. ஆனால், ஊழல் இல்லாதவர். அதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உம்மன் சாண்டியை எனக்கு அவரின் மாணவப் பருவத்தில் இருந்தே தெரியும். தனிமனித அளவில் அவர் நல்லவர். துரதிருஷ்டவசமாக, அவர் சார்ந்திருக்கும் கட்சியினால் அவர் மீதும் களங்கம் ஏற்படுகிறது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் கேரள அரசியல்வாதிகள் ஓர்அணியில் நிற்கிறார்கள் என்பது எல்லாம் 'பாவ்லா’தான். 'என் கட்சிக்குச் சேர வேண்டிய நல்லபெயர் அவன் கட்சிக்கு போய்விடக்கூடாது’ என்ற எண்ணத்தில்தான் ஓடி வருகிறார்கள். மற்றபடி, பினராய் விஜயனோ, அச்சுதானந்தனோ, உம்மன் சாண்டியோ எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!''

''முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழகப் பெண்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதைக் கண்டித்து எந்தக் கேரள அரசியல்வாதியும் வாய் திறக்கவில்லையே?''

''அதை ஒப்புக்கொள்கிறேன். தமிழர்கள் தாக்கப்பட்டது போல மலையாளிகளும் தாக்கப்பட்டார்கள். இந்தத் தாக்குதல்களை இரண்டு பக்கத்தைச் சேர்ந்த ஊடகங்களும் திரைக்கதை, வசனங்கள், மசாலாக்கள் சேர்த்துச் சொல்லி விட்டன. தன்னைத் தாக்கியவனைத் திருப்பித் தாக்கிய விஷயம் தமிழன் _ மலையாளி சண்டையாக மாற்றப்பட்டு விட்டது. அவ்வளவுதான்!''

''முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உங்களின் திட்டவட்டமான கருத்து என்ன?''

''என்னைக் கேட்டால் அணைகளே வேண்டாம் என்று சொல்வேன். கேரளாவில் மட்டும் 46 அணைகள் இருக்கின்றன. விவசாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்றுதான் இந்த அணைகளைக் கட்டினார்கள். ஆனால், இன்று அணை இருக்கிற பகுதிகளில் விவசாயம் செத்து விட்டது. சுற்றுச்சூழல் பிரச்னைகளின் அடிப்படையில் பார்த்தால் அணைகள் தேவை இல்லை. அணையை உடைக்க வேண்டுமோ அல்லது கூடாதோ, புதிய அணை தேவையோ அல்லது கூடாதோ, முடிவில் தமிழகத்துக்குத் தண்ணீர் தேவை. அதற்கு என்ன மாற்று வழிகள் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஆனால், இரண்டு மாநில அரசுகளும் இதுகுறித்துப் பேசுவதில்லை''.

''தமிழகத்தில் இருந்து, 'அணை உடைக்கப்பட்டால் இந்தியா உடையும்’ என்று குரல் எழுந்திருக்கிறதே...''

''இந்தப் பிரச்னையே தேர்தல் அவசரவாத அரசியல்தான். கேரள அரசியல்வாதிகள் சொல்கின்ற கருத்துக்கள் எல்லாம் கேரள மக்களின் கருத்துகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், தமிழகத்தின் அரசியல்வாதிகள் மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் பேச்சுக்களைப் பேசக்கூடாது. அப்படியே ஒரு வேளை, அணை உடைக்கப்பட்டு, புதிய அணை கட்டிய பிறகு தமிழகத்துக்குத் தண்ணீர் தரமாட்டோம் என்று கேரள அரசு சொன்னால், அதை எதிர்த்து முதல் போராட்டம் கேரள மக்களிடத்தில் இருந்துதான் வெடிக்கும்!''

''இன்னமும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?''

''நம்பிக்கை கொண்டிருப்பது, ஆதரிப்பது மட்டுமல்ல... அதுதான் சரி!''

- ந.வினோத்குமார்