இலங்கைச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டி, நாளரு போராட்டமும் பொழுதொரு ஆர்ப்பாட்டமுமாய் தகிக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்... இப்போது புதியதொரு போராட் டத்துக்குத் தயாராகிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்தில், கேரள அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து வித்தியாசமான முறையில் போராட இருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ராமேஸ் வரத்தில் பேச்சாளை எனப்படும் ஒரு வகை மீன்சீசன் தொடங்கும். இந்த மீன்தான் கேரளாவை மடக்கும் தூண்டில். அதாவது, அந்த மக்கள் விரும்பிச் சாப்பிடுவது பேச்சாளை மீனைத்தான். அதை, ராமேஸ்வரம் மக்கள் அனுப்பாமல் விட்டால் என்ன ஆகும்? கேரளாவுக்கான தனது எதிர்ப்பாக இதனைக் காட்ட முடிவெடுத்துள்ளார்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசினார் ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன். ''நம்ம மாநிலத்துல பேச்சாளை மீனை அவ்வளவாக சாப்பிடுறதில்லை. மலையாளிங்க இதை விரும்பிச் சாப்பிடுவாங்க. அவங்க அதை 'மத்தி’னு சொல்லுவாங்க. நிறைய எண்ணெய் பிசுபிசுப்போட மளுமளுன்னு இருக்கும் பேச்சாளை மீனுக்கு கேரளாவில் ஏக டிமாண்ட். பேச்சாளை மீன் பெருக்கத்துக்கான தட்ப வெட்பம், ஜனவரி மாசம்தான். கேரள மலபார் கடற்கரையைவிட மன்னார் வளைகுடா - பாக் ஜலசந்தி கடல்ல ஜனவரி மாசம் மட்டும் டன் கணக்குல பேச்சாளை மீனுங்க கிடைக்கும். ஜனவரி மாசம் கேரளாவைச் சேர்ந்த மீன் கம்பெனிங்க இங்கேயே தங்கி, பெரிய அளவுக்கு பிசினஸ் செய்வாங்க. இந்தத் தடவை, அவங்களுக்கு மீனைக் கொடுக்காம பெரிய அளவுக்கு போராட்டம் பண்ணலாம்னு இருக்கோம். வேற்றுமைகள் மறந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவ அமைப்புகள் ஒண்ணா சேர்ந்து, நமக்குத் தண்ணி தராத கேரளாவுக்கு மீனு தரமாட்டோம்னு உறுதியா நிற்கப் போறோம்'' என்றார் கொதிப்பாக!

ராமேஸ்வரம் பகுதிகளில் இயங்கும் கேரள மீன் கம்பெனிகளைப் பற்றி முக்கியத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் கீழக்கரையைச் சேர்ந்த அபிராம் என்ற சமூக ஆர்வலர். ''கேரள மீன் கம்பெனிகளோட யூனிட்டுகள் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில இருக் குது. மத்த நேரத்துல பரம சாதுவா இருப்பாங்க. பேச் சாளை சீசன் ஆரம்பிச் சதும்... அதகளம் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. ராமேஸ்வரத்துல மதிய நேரத்தில் கிளம்பும்

கேரள லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடே இருக்காது. ஏன்னா, இருட்டுறதுக்குள்ள திருவனந்தபுரம் மார்க்கெட் டுக்கு போய்ச் சேர்ற சரக் குக்கு கூடுதல் விலை கிடைக்கும். அதனால போக்குவரத்து விதிமுறைகள் எதையும் அவங்க மதிக்கிறதே இல்லை. சராசரியா ஏழு மணி நேரத்துல போற களியக்காவிளை, மார்த் தாண்டம்

பகுதிகளுக்கு அஞ்சு மணி நேரத்துலேயே போயிடுவாங்க. பேச்சாளை மீனுகிட்ட இருந்து ஒருவித எண்ணெய்க் கழிவு வடிஞ்சுக்கிட்டே இருக்கும். அதனாலும் பல விபத்துகள் நடந்திருக்கு. கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி போன்ற கிழக்கு கடற்கரை சாலையில மட்டும் போன சீசன்ல மூணு ஆக்ஸிடெண்ட் நடந்து நாலு பேர் பலியாகிட்டாங்க. போன வருஷம் மண்டபம் கேம்ப் பக்கத்துல 108 ஆம்புலன்ஸ் மீதே ஒரு கேரள மீன் லாரி மோதிடுச்சு.

சாதாரணமாவே சீசன் நேரத்துல கிழக்குக் கடற் கரைச் சாலையோர கிராம மக்கள் எல்லாருமே, கேரளாவை சபிச்சுக்கிட்டுத்தான் இருப்பாங்க. அந்த அளவுக்கு அந்த மீன்வாடை படுத்தி எடுக்கும். இந்த மீனைச் சுற்றி, 'மணி ஈ’ என்ற ஒரு வகை ஈயும் இந்த சீசன்லதான் அதிகமாப் பெருகும். இந்த ஈயால வர்ற நோய்களைப் பத்தி தனிப்பட்டியலே போடலாம். அதனால் இந்த மீன் பிடிக்கிறதை தடை செய்யணும்னு பலமுறை மக்கள் போராட்டம் நடத்தியும் அரசாங்கம் கண்டுக்கவே இல்லை. தடை செய்யப்பட்ட இரட்டை மடிகளை வச்சுத்தான் பல மீனவர்கள் கேரளக்காரங்களுக்குப் பிடிச்சிக் கொடுக்குறாங்க. அதை சரியா கண்காணிச்சு தடை செஞ்சாலே கேரள மீன் கம்பெனிகள் யாரும் இங்கே வர மாட்டாங்க. இங்கே நம்ம கண்ணைக் குத்தி அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டுப் போற கேரளக் கம்பெனிகள்... அங்கே கொள்ளை லாபம் பார்க்குறாங்க. முல்லைப் பெரியாறு விவகாரத்துல நமக்கு எதிரா ஒண்ணு திரண்டு நிக்கிற பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் மீன் கம்பெனிகளோட சப் யூனிட்டுகள் இங்கேதான் இருக்கு. முல்லைப் பெரியாறு பிரச்னையை மையமா வச்சாவது கேரள முதலாளிகளுக்கு நம்ம மீனவர்கள் மீன் பிடிச்சுக் கொடுக்காம இருந்தா கேரள அரசுக்கு நம்ம வலியும்... வலிமையும் புரியும்!'' என்றார் கொந்தளிப்பாக.

முல்லைப் பெரியாறு போராட்டம் வெற்றி அடைய, பேச்சாளை மீனும் உதவி புரியட்டும்!

- ஆர்.சரண், படங்கள்: உ.பாண்டி