எப்போதும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழியும் சபரிமலையில் இந்த ஆண்டு கூட்டம் குறைந்ததாக வழக்கமாகச் செல்லும் பக்தர்கள் சொல்கிறார்கள். காரணம் முல்லைப் பெரியாறு விவகாரம்!

''ஐயப்பன் சன்னதியில் இருக்கும் 18 படிகளையும் பெரும்கூட்டத்தோடுதான் கடந்து செல்லவேண்டி இருக்கும். அதிலும் 18-ம் படியில் காலை முழுமையாக வைப்பதற்குள்ளாகவே, மேலே நிற்கும் போலீஸார் நம்மைத் தூக்கிவிட்டு விடுவார்கள். ஆனால், இந்த வருடம் 18 படிகளையும் தனியரு ஆளாகவே நான் கடந்து சென்றேன்'' என்று ஆச்சர்யப்படுகிறார், சமீபத்தில் சபரிமலை சென்று வந்த நண்பர். நிலவரத்தை நேரில் அறிய, குமுளி வழிப்பாதையில் சென்று சபரிமலையை அடைந்தோம்.

நவம்பர் 16 முதல் ஜனவரி 20 வரையிலான நாட்கள் ஐயப்பன் கோயில் சீசன் என்பதால், எருமேலி சாலையில் கூட்டம் நிரம்பி வழியும். ரோட்டில் இருசக்கர வாகனம்கூட செல்ல முடி யாத அளவுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்று கொண்டு இருப்பார்கள். தங்க ளுடன் வந்த சக பக்தர்களைக் கூட்டத்தில் தொலைத்துவிட்டு, தேடும் அளவுக்குக் கூட்டம் கும்மி அடிக்கும். ஆனால் இப்போது..?

திருப்பூரில் இருந்து வந்திருக்கும் ரமேஷ் குழுவினர், ''சபரிமலைக்குக் கேரளத்துக்காரர்கள் அதிகம் வருவது இல்லை.. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மற்ற மாநில பக்தர்களும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடு வாழ் தமிழர்களும்தான் அதிக அளவில் வருவாங்க. இந்த வருஷம் கோயில் நடை திறந்ததும், கூட்டம் வழக்கம் போல் வந்தது. ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்னை

தொடங்கி, கேரள எல்லையில் ஐயப்ப பக்தர்கள் கார் தாக்கப்பட்ட பிறகு நிலைமை தலைகீழ். சபரிமலைக்கு வரத் திட்டம் போட்டிருந்த பல பக்தர்களும் தங்களோட திட்டத்தை மாத்திக்கிட்டாங்க. பெரும்பாலான பக்தர்கள், அவரவர் ஊர்களிலேயே விரதத்தை முடித்துவிடுகிறார்கள். வழக்கமாக குமுளி வழியாக வரும் பக்தர்கள் கம்பம் அருகே இருக்கும் தம்மனம்பட்டி ஐயப்பன் கோயிலிலோ அல்லது ராயப்பன்பட்டி ஐயப்பன் சன்னதியிலோ விரதத்தை முடிக்கிறார்கள்'' என்று, நிலவரத்தைப் புட்டு புட்டு வைத்தனர்.

சாலையோரம் பாத்திரக் கடை வைத்திருக்கும் முகமது சலீம், ''இங்கு வரும் பக்தர்களை நம்பித்தான் நாங்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி, கடை களை வாடகைக்கு எடுத்து இருக்கிறோம். ஆனால், இந்த ஆண்டு பக்தர்கள் வருகை முழுமையாகக் குறைந்துவிட்டது. எங்களுக்கு பக்தர்களைத் தாக்கும் எண்ணம் துளியும் இல்லை. இந்தப் பிரச்னையால், இங்கு 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்'' என்றார்.

நடைபாதை வியாபாரிகளோ, ''பம்பையில் இருந்து சன்னிதானம் வரை, நாங்கள் சிறுசிறு கடைகளை பிளாட்ஃபாரத்தில் வைத்திருக்கிறோம். இதை 30 வருடங்களாக செய்து வருகிறோம். பெரும்பாலும் வட மாநிலத்தவர்களும் தமிழர்களும்தான் அதிகம். இப்போது, முல்லைப் பெரியாறு பிரச்னை ஏற்பட்ட பிறகு, கேரள அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. மலையாளிகள் தவிர வேறு யாரும் நடைபாதையில் வியாபாரம் செய்யக்கூடாது என்று விரட்டுகின்றனர். பொருட்களைத் தூக்கி எறிந்தும் சேதப்படுத்தினார்கள். இவர்கள் தொல்லை தாங்க முடியாமல், வட மாநில வியாபாரிகள், மூட்டை முடிச்சுகளோடு சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். முல்லைப் பெரியாறு விவகாரம் முடிவுக்கு வந்தாலும், இவர்களது 'தமிழர் - மலையாளி’ என்ற பார்வை மாற நீண்ட காலம் ஆகும்'' என்றனர்.

பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, சரங்குத்தி பகுதிகள் வழியே சபரிமலைக்குச் செல்லவேண்டும். இடைப்பட்ட ஐந்து கிலோமீட்டர் தூரமும் நடந்தேதான் செல்ல வேண்டும். வாகனப் போக்குவரத்து இல்லை. நடக்க முடியாதவர்கள் 'டோலி’ என்ற பல்லக்கில் செல்லலாம். கீழே இருந்து டோலி மூலம் மேலே ஒருவரை அழைத்துச் சென்று வர

1800 வசூலிக்கப்படுகிறது. பொருட்களை கோயிலுக்குக் கொண்டு செல்லக் கழுதைகளும் டிராக்டர்களும் பயன்படுத்தப்படுகிறது. பல்லக்குத் தூக்கிகள், துப்புரவு பணியாளர்கள், கழுதை ஓட்டிகள் என அனைவருமே தமிழர்கள். நிர்வாக அலுவலக ஊழியர்கள் அனைவரும் மலையாளிகள்.

சபரிமலைக்கு நாம் சென்றிருந்தபோது... மண்டல பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்டு இருந்தது. மறுபடியும் மூன்று நாட்கள் கழித்து 30-ம் தேதி நடை திறப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் சொன்னார்கள். நடை சாத்தப்பட்டு இருந்தாலும், கோயிலில் பக்தர்கள் தங்கி காத்திருந்து, ஐயப்பனை தரிசனம் செய்து விட்டுச் செல்வதுதான் வழக்கம். ஆனால், இந்த முறை பக்தர்கள் யாரையும் காணோம். வழக்கத்துக்கு மாறாக கோயில் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

''நாங்கள் 140 பேர் வந்திருக்கிறோம். அதில் 90 பேர் தமிழர்கள். நாங்கள் கோயில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கும் சமயங்களில் தமிழர்கள் - மலையாளிகள் பாகுபாடு பல சமயங்களில் நடப்பது உண்டு. கேரளத்து பக்தர்கள் எல்லாவற்றிலும் உரிமையோடு, நடந்து கொள்கிறார்கள். ஆனால், மற்ற மாநில பக்தர்கள், பயந்து ஒதுங்கியே தரிசனம் செய்துவிட்டுப் போகிறார்கள்'' என்றார்கள்.

சன்னிதானம், பம்பை, எருமேலி போன்ற இடங்களில் மூன்று வேளையும் அன்னதானம், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் சர்வீஸ் செய்து வரும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்துக்குச் சென்றோம். அதன் கேம்ப் ஆபீஸர் பாலன் நம்மிடம், ''இங்கு இருக்கிற மருத்துவர்கள், வாலண்டியர்கள் அனைவருமே சம்பளம் வாங்காமலே பணிபுரிகிறார்கள். ஐயப்பனுக்கு சேவை பண்ணுவதாக நினைத்து, மாலை போட்டு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு, இலவசமாக மூன்று வேளை சாப்பாடு, மருத்துவ உதவி, மூலிகை குடிநீர் கொடுக்கிறோம். இங்கு இருக்கும் பெரும்பான்மையோர் தமிழர்கள்தான். கோயிலுக்கு வருவதற்காக பக்தர்கள் கேரளாவுக்குள் நுழைந்து விட்டால், அவங்களுக்கு என்ன உதவி என்றாலும் செய்யக் காத்து இருக்கிறோம். மலைக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலோனர் தமிழர்கள்தான். எனவே, எந்தப் பிரச்னை என்றாலும் தாராளமாக எங்களை அணுகலாம்'' என்றார்.

வருடம் முழுவதும் கேரளாவுக்கு வரும் வருமானத்தை விட, சபரிமலை சீசன் நேரத்தில் கிடைக்கும் வருமானம் அதிகம். அந்த வருமானம் இந்த வருடம் குறைந்து இருப்பதால் வருத்தத்தில் இருக்கிறார்கள் சபரிமலை தேவஸ்தான அதிகாரிகள்.

ஐயப்பன் கோயில் மக்கள் தொடர்பு அலுவலர் முரளியிடம் பேசினோம். ''சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு பக்தர்கள் வரத்து குறைவுதான். அதற்காகத்தான் கடந்த வாரம், 'ஐயப்ப பக்தர்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் பயணம் பாதுகாப்பானதாக அமையும்’ என்று கேரள எல்லையில் சென்டை மேளம் முழங்க வரவேற்றோம். அவர்களை கனிவுடன் நடத்தினோம். மலேசியா, சிங்கப்பூரில் இருந்து எல்லாம் எனக்கு போனில் பேசுகிறார்கள். அவர்கள் எப்போதும் மதுரை ஏர்போர்ட் வந்து, குமுளி வழிப்பாதையில் சபரிமலை வருவார்கள். இந்த ஆண்டு நிலைமை மோசமாக இருப்பதால், திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இறங்கி வரச் சொல்கிறோம். ஒரு சிலரை செங்கோட்டை, பாலக்காடு பாதையில் வரச் சொல்கிறோம்'' என்றார்.

உடைந்து போன கண்ணாடியை ஒட்ட வைத்துப் பார்ப்பது போன்று, பிளவு இருக்கத்தான் செய்கிறது.

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வீ.சிவக்குமார்