Published:Updated:

காட்பாடியில், காதல் தோல்வியால் குமரி மாணவர் தற்கொலை - கிறிஸ்துமஸ் நாளில் சோகம்

காட்பாடியில், காதல் தோல்வியால் குமரி மாணவர் தற்கொலை - கிறிஸ்துமஸ் நாளில் சோகம்
காட்பாடியில், காதல் தோல்வியால் குமரி மாணவர் தற்கொலை - கிறிஸ்துமஸ் நாளில் சோகம்

காட்பாடியில் கேட்டரிங் படித்துவந்த மாணவர், காதல் தோல்வியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மிடாளம் பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் சேவியர். இவரின் மகன் சத்ஜன்ராஜ் (19). இவர், வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் வசிக்கும் பெரியம்மா மேரி சுஜாதா வீட்டில் தங்கியிருந்து, வி.ஜி.ராவ் நகரில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்துவந்தார். இந்த நிலையில், இளம்பெண் ஒருவர்மீது சத்ஜன்ராஜ் காதல் வயப்பட்டார்.

அந்தப் பெண்ணிடம் தன்னுடைய காதலை மனம் திறந்து வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்தப் பெண், அவரின் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் சத்ஜன்ராஜ், சில நாள்களாக சோகமாக இருந்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நேற்றிரவு அவரின் பெரியம்மா குடும்பத்தினர் தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்காகச் சென்றனர்.
பிரார்த்தனைக்கு சத்ஜன்ராஜை பெரியம்மா அழைத்தபோது, அவர் வர மறுத்துவிட்டார். பின்னர், வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.  காலைப் பிரார்த்தனை முடிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக வீட்டுக்கு வந்த  அவரின் பெரியம்மா குடும்பத்தினர், அறைக் கதவை நீண்ட நேரமாகத் தட்டினர். சத்ஜன்ராஜ் கதவை திறக்காததால் அதிர்ச்சியடைந்து, கதவை உடைத்தனர்.

அப்போது, மாணவன் சத்ஜன்ராஜ் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடலை கட்டித்தழுவி கதறி அழுதனர். இதுபற்றி தகவலறிந்ததும், விருதம்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ‘ஒருதலைக் காதலால்தான் மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக’ அவரின் பெரியம்மாள் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நிகழ்ந்த இந்தச் சம்பவம், மாணவரின் உறவினர்களின் இல்லங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.