Published:Updated:

கடலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு - போலீஸார் விசாரணை!

கடலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு - போலீஸார் விசாரணை!
கடலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு - போலீஸார் விசாரணை!

கடலூர் மாவட்டம் புதுச்சந்திரம் - பரங்கிப்பேட்டை சாலையில் பெட்ரோல் பங்க் இயங்கிவருகிறது.  இந்த பங்க்கில், பால்வார்த்துள்ளான் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் (38) பணியில் இருந்துள்ளார். நேற்று இரவு, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், வண்டிக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர். ஆனால், பெட்ரோலுக்கு பணம் கொடுக்காமல், மறைத்துவைத்திருந்த அரிவாளால் சிவசங்கர் தலையில் வெட்டியுள்ளனர். இதனால் சிவசங்கர் நிலைகுலைந்தார்.

இந்தநிலையில், அவர் கையில் வைத்திருந்த பணப் பையைப் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். அங்கிருந்தவர்கள், அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள், வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர். தலையில் படுகாயமடைந்த சிவசங்கரை அருகில் இருந்தவர்கள்  கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைபெற்றுவருகிறார்.

இதுகுறித்து தகவலறிந்த கடலூர் எஸ்.பி சரவணன், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம்குறித்து புதுச்சந்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், பெட்ரோல் பங்க்கில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு வாலிபர்கள்குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.