Published:Updated:

தர்மபுரி வாலிபரை கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்!

தர்மபுரி வாலிபரை கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்!
தர்மபுரி வாலிபரை கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்!

அரியலூர்: கள்ளக்காதல் பிரச்னையில் தர்மபுரியை சேர்ந்த ஒருவர் அரியலூர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அடிக்கடி அடையாளம் தெரியாத சடலங்கள் கிடப்பது பற்றி விகடன்.காமில் செய்தி வெளியிட்டிருந்தோம். கடந்த மாதம் 27ஆம் தேதி வாலிபர் ஒருவர், ஜெயங்கொண்டம் அருகே தேவனூர் வளையக்காலனி தெருவில் உள்ள பொதுக் கிணற்றில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் யார்? எப்படி இறந்தார்? என்று விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் குமிழியம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் ( 27) என்பவர் ஜெயங்கொண்டம் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ், அதே ஊரைச் சேர்ந்த சுகந்தியை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 2 குழந்தைகள் உள்ள நிலையில் கோவைக்கு மனைவி, குழந்தைகளுடன் சென்ற பாக்யராஜ் அங்கு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை செய்த தர்மபுரியை சேர்ந்த பழனிச்சாமி பாக்யராஜின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வாராம். அப்படித்தான்  அவருக்கும் சுகந்திக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த பாக்யராஜ் மனைவியை கண்டித்தார்.

இதற்கிடையில் பழனிச்சாமி சுகந்தியை அழைத்துக் கொண்டு தர்மபுரி சென்றுவிட்டார். இதுபற்றி சுகந்தியின் தாய் ரஞ்சிதத்திடம் பாக்யராஜ் கூறினார். பின்னர் மகளுடன் நைசாக பேசி நாகல்குழிக்கு வரவழைத்து சுகந்தியை சமாதானம் செய்தார். ஆனால் சுகந்தி கள்ளக்காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் பழனிச்சாமியை கொலை செய்ய திட்டமிட்ட ரஞ்சிதம், மகள் சுகந்தியின் மூலம் பழனிச்சாமியை ஊருக்கு வரவழைத்தார்.

##~~##
பின்னர் பாக்யராஜ், அவரது உறவினர் செல்வராஜும் சேர்ந்து பழனிச்சாமிக்கு மது வாங்கி கொடுத்தனர். குடி போதையில் இருந்த பழனிச்சாமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பொது கிணற்றில் வீசினர். அவர்களுக்கு துணையாக நானும் இருந்தேன் என்று மணிகண்டன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மணிகண்டன் கொடுத்த இந்த தகவலின் பேரில் கொலைக்கான காரணங்களை கண்டுபிடித்த போலீசார், ரஞ்சிதம் மற்றும் அவரது மருமகன் பாக்யராஜ், உறவினர் செல்வராஜ், மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ளனர். 
தர்மபுரியை சேர்ந்த ஒருவர் அரியலூர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஆனந்தகுமார்