Published:Updated:

`ஜாமீனில் வருவார்; கருக்கலைப்பு செய்வார்!' - பெண்ணை குண்டாஸில் போட்ட திருவண்ணாமலை கலெக்டர்

`ஜாமீனில் வருவார்; கருக்கலைப்பு செய்வார்!' - பெண்ணை குண்டாஸில் போட்ட திருவண்ணாமலை கலெக்டர்
`ஜாமீனில் வருவார்; கருக்கலைப்பு செய்வார்!' - பெண்ணை குண்டாஸில் போட்ட திருவண்ணாமலை கலெக்டர்

திருவண்ணாமலையில் 15 ஆண்டுகளில் 19,000 கருக்கலைப்பு செய்துள்ளார் ஒரு பெண். அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

`ஜாமீனில் வருவார்; கருக்கலைப்பு செய்வார்!' - பெண்ணை குண்டாஸில் போட்ட திருவண்ணாமலை கலெக்டர்

திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த ஆனந்தி, தனது வீட்டில் அனுமதியின்றி ஸ்கேன் சென்டர் வைத்திருந்தார் என்பதற்காகவும், சட்டவிரோதமாகக் கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்று பாலினம் கண்டறிந்து, பெண் சிசு என்றால் கருக்கலைப்பு செய்த குற்றத்துக்காகவும் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்தவர், மீண்டும் அதே வேலையைத் தொடர்ந்து செய்ய 2016-ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். 

மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தி, கலெக்டர் அலுவலகம் அமைந்திருக்கும் வேங்கிக்கால் பகுதி அருகே பொன்னுசாமி நகரில் புதியதாக மூன்று அடுக்குமாடி வீட்டில் கருக்கலைப்பு செய்வது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் மாவட்ட ஆட்சியருக்கும், மருத்துவ கண்காணிப்புக் குழுவுக்கும் புகார் சென்றுள்ளது. கடந்த 1-ம் தேதி கண்காணிப்புக் குழு செய்த அதிரடி சோதனையில் ஆனந்தி சிக்கினார். ஆனந்தியின் வீட்டில் சோதனை போட்டதில், லேப்டாப் வடிவிலான ஸ்கேன் கருவி, கருவைக் கலைக்கத் தேவையான ஊசிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தது மருத்துவக்குழு

`ஜாமீனில் வருவார்; கருக்கலைப்பு செய்வார்!' - பெண்ணை குண்டாஸில் போட்ட திருவண்ணாமலை கலெக்டர்

மேலும்,  ஒரு நாளைக்கு 10 முதல் 20 பெண்கள் கருவைக் கலைக்க ஆனந்தியிடம் வந்துள்ளனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஸ்கேன் கருவி, கோப்புகள், இதற்கு முன்னதாக 2012 மற்றும் 2016 ஆண்டுகளில் கருக்கலைப்பு செய்யப்பட்ட ஸ்கேன் கருவி ரிப்போட்களை வைத்துப் பார்க்கும்போது 15 ஆண்டுகளில் 19,000 சிசுக்களை கருக்கலைப்பு செய்து கருவிலேயே அழித்தார் என மாவட்ட ஆட்சியரே கூறினார். இந்த நிலையில் ஆனந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க ஆனந்தியை 'குண்டர் சட்டத்தில்' கைது செய்ய  மாவட்ட ஆட்சியர் கந்தசாமி  எஸ்.பி சிபிசக்கரவர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் ஆனந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.