கோவை மாவட்டத்தின் நீராதாரம் வெள்ளியங்கிரி மலை. நொய்யல், சிறுவாணியின் நதிமூலமும் இதுவே. நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் முக்கியப் பகுதிகளில் ஒன்று இது. இன்னும் நிறையச் சொல்லலாம். ஆனால், இந்த மலையை ஆக்கிரமிப்புகள், ஆன்மிகம், சாசக சுற்றுலா என்கிற பெயரில் சூறையாடிவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் கார்த்திகை தீபத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இங்கு தீபம் ஏற்றப்படுவதால் வனம் முழுவதும் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரியைப் பாதுகாக்கக் கோரி நீண்டகாலமாகச் சட்டப் போராட்டம் நடத்திவருகிறார், இந்து மக்கள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் செந்தில்குமார். “வெள்ளியங்கிரி பகுதியில் சமீபமாக அதிகளவில் கட்டடங்கள், மின்வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் மனுக்கள் அளித்துள்ளேன். ஆனால், நடவடிக்கை இல்லை. சிலர் வெள்ளியங்கிரி மலையில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் பெரிய கொப்பரைகளில் ஆயிரக்கணக்கான லிட்டர் எண்ணெய் ஊற்றி சுமார் மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து தீபத்தை எரியவிடுகின்றனர். தீபத்திலிருந்து தீப்பொறி பரவினால் வனம் முழுவதும் தீப்பிடிக்கும். கார்த்திகை தீபத்துக்காகப் பல லட்சம் வசூல் செய்து, வனத்துறையின் அனுமதி இல்லாமல் 45 நாள்கள் மலையில் தங்கிவிடுகின்றனர். மலையிலேயே குடித்துவிட்டுக் ஆட்டம்போடுகின்றனர். ஆண்டு முழுவதும் சாகச சுற்றுலா என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக மலை ஏறுகிறார்கள்.

சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இங்கே குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே மக்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். ‘வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கோ தங்குவதற்கோ அனுமதியில்லை’ என்று வனத்துறை கூறியுள்ளது. ஆனால், அரசியல் அழுத்தங்கள் காரணமாக, நடவடிக்கை எடுக்க வனத்துறை தயங்குகிறது. எனவே, வெள்ளியங்கிரி மலையைப் பாதுகாக்கக் கோரி, 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். விசாரணையில், ‘வழக்கின் கோப்புகளைக் காணவில்லை’ என்று அப்போதைய பதிவாளர் சொன்னார். கோப்புகளைத் தேடி எடுப்பதற்குள், மலையில் தீபத்தை ஏற்றிவிட்டார்கள். கடந்த ஆண்டும் வழக்குத் தொடர்ந்தேன். அப்போது தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., கோவை கலெக்டர், கோவை மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால், தீபம் ஏற்றத் தடை விதிக்க வில்லை. இதனால், கடந்த ஆண்டும் தீபம் ஏற்றினார்கள். இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின் றன. தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரத் தடைக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்” என்றார்.

சமூக ஆர்வலர் அனந்தராமன், “வெள்ளியங்கிரியில் தீபம் ஏற்றும் முறை வழக்கத்தில் இல்லாதது. திருவண்ணாமலையில் மட்டும்தான் ஜோதி ஏற்றுவது வழக்கம். மற்ற சிவன் கோயில்களில் அகல் விளக்கு ஏற்றுவார்கள்.
வெள்ளியங்கிரியில் தீபம் ஏற்றுவது மரபையே மாற்றும் செயல். இல்லாத முறைகளைத் திணிப்பதால் எதிர்காலத்தில் ஆன்மிக நெறிகளே மாறிவிடும். பொதுமக்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்படுத்தும். இந்தப் பிரச்னைக்கு சட்டரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் தீர்வு கொடுக்கவேண்டும்” என்றார்.

“வெள்ளியங்கிரியில் வனத்துறைக்குச் சொந்தமாக ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தை இந்து அறநிலையத் துறைக்கு 1971-96-ம் ஆண்டுவரை மட்டுமே வனத்துறை ஒப்பந்தம் மூலம் வழங்கியுள்ளது. 1996-க்குப் பிறகு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. ஒப்பந்தம் காலாவதியான பின்பும் அங்கு கடைகள் வைக்கவும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யவும் பிரபல துணிக்கடை அதிபரின் பினாமி ஒருவருக்கு ஏலம் விடப்படுகிறது. இந்த முறை 42.5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஆளுங்கட்சி பிரமுகர்கள் மற்றும் சில கார்ப்பரேட் நிறுவனத்தினர் வெள்ளியங்கிரி மலையில் அத்துமீறி ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுகின்றனர். தனிப்பட்ட பிரச்னைகளுக்காகவும் சிறப்பு யாகங்களை நடத்துகிறார்கள். தொண்டாமுத்தூர் தொகுதியைப் பொறுத்தவரை அங்கு தனி அரசாங்கம் நடப்பதால், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் வெள்ளியங்கிரி மலையே தனியார் ரிசார்ட்போல மாறிவிடும்” என்கின்றனர் உள் விவரமறிந்தவர்கள்.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், “இதுதொடர்பாக விசாரணை நடத்திவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

ஏற்கெனவே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 40 ஆண்டுகளாகத் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 23,000 ஹெக்டேர் வனப்பரப்பைச் சட்டப் போராட்டத்தின் மூலம் மீட்டதில் முக்கியப் பங்கு வெங்கடேஷுக்கு உண்டு. இங்கும் அவர் அதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று நம்புவோம்.

- இரா.குருபிரசாத்
படங்கள்: தி.விஜய்