Published:Updated:

ரூ. 5 கோடி மணல் கொள்ளை! - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்

ரூ. 5 கோடி மணல் கொள்ளை! - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்
பிரீமியம் ஸ்டோரி
News
ரூ. 5 கோடி மணல் கொள்ளை! - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்

ரூ. 5 கோடி மணல் கொள்ளை! - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்

த்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்தார். அவர், சட்ட விரோதமாக ஒரு மணல் குவாரியையும் நடத்தி வந்துள்ளார். அந்த மணல் குவாரிக்கு சீல் வைத்து, அங்கிருந்த பொக்லைன் எந்திரம், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் ரூ. ஐந்து கோடி மதிப்புள்ள மணலைத் திருடி விற்பனை செய்துள்ள அந்த பி.ஜே.பி நிர்வாகி, கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக, தற்போது தலைமறைவாகியுள்ளார். 

ரூ. 5 கோடி மணல் கொள்ளை! - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்

பி.ஜே.பி-யின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி இணைச் செயலாளராக இருப்பவர் அகோரம். நாகை மாவட்டம் திருவெண்காட்டை அடுத்த இளைமதுகூடம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் முன்பு, பா.ம.க-வின் மாநிலத் துணைத் தலைவராக இருந்தவர். ஒரு கொலை வழக்கில் சிக்கிய பிறகு, பி.ஜே.பி-க்குத் தாவிய அகோரம், கடந்த பல மாதங்களாக மணல் திருட்டில் ஈடுபட்டுவந்தார் என்கிறார்கள் திருவெண்காடு பகுதி மக்கள்.

இது தொடர்பாக அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்தோம். “எங்கள் பகுதியில் அய்யன்குளம், சுடுகாட்டுக்குளம் மற்றும் குச்சிப்பாளையம் குளம் உள்ளன. அந்தக் குளங்களில் மணல் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அகோரம். திருட்டு மணலை, சம்பாகட்டளை என்ற இடத்தில் குவித்துவைத்து, பல ஊர்களுக்கு விற்பனை செய்துவந்தார். அதிகாரிகள் சிலர் இதற்கு உடந்தை. இந்நிலையில், நாகை மாவட்ட எஸ்.பி விஜயக்குமாருக்கு, இந்த மணல் கொள்ளை குறித்துத் தகவல் கிடைத்துள்ளது. அவர், டி.எஸ்.பி சுவாமிநாதன் தலைமையிலான தனிப்படைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சட்ட விரோத மணல் குவாரி நடத்தியதாக அகோரம் உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அகோரத்தின் உறவினர்களான புனிதவள்ளி, ரமேஷ், மூர்த்தி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சர்வேயர் மூலம் அளவிடப்பட்ட சுமார் 1,800 யூனிட் மணல் கொண்ட குவாரி சீல் வைக்கப்பட்டு, கனிமவளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது” என்றனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரூ. 5 கோடி மணல் கொள்ளை! - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “இதுவரை சுமார் ஐந்து கோடி ரூபாய்  மதிப்புள்ள மணலை அகோரம் திருடியுள்ளார். திருவெண்காடு இன்ஸ்பெக்டராக வேலுதேவி வந்ததில் இருந்து திருட்டு மணல், கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து என சகலமும் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. இதைக் கண்டித்து நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்தச் செய்திகள் கசிவதற்குக் காரணமாக இருந்ததாக எஸ்.ஐ. கணேசன், எஸ்.எஸ்.ஐ சிவானந்தம் ஆகியோர் மீது சந்தேகித்த இன்ஸ்பெக்டர் தரப்பு, அவர்களை டிரான்ஸ்ஃபர் செய்ய வைத்தது. போலீஸில் சிலருக்கு மாமூல் போனது உறுதிசெய்யப்பட்டதால், இன்ஸ்பெக்டர் வேலுதேவியின் டிரைவர் அன்பரசன் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். வேலுதேவியிடம் எஸ்.பி தீவிர விசாரணை நடத்தினார். இந்த அதிரடி நடவடிக்கைகளால், விடுப்பில் இருந்த சீர்காழி டி.எஸ்.பி சேகர், உடனடியாகப் பணிக்கு வந்தார். எஸ்.பி-யின் உறுதியான நடவடிக்கையால் அரண்டுபோன அகோரம், தலைமறைவாகி விட்டார்” என்றனர். 

ரூ. 5 கோடி மணல் கொள்ளை! - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்

இதுபற்றி இன்ஸ்பெக்டர் வேலுதேவியிடம் விளக்கம் கேட்டபோது, “எதுவானாலும் டி.எஸ்.பி-யிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்றார். சீர்காழி டி.எஸ்.பி சேகரிடம் கேட்டபோது, “விரிவான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. முடிவில்தான் எதையும் சொல்ல முடியும்” என்றார்.          
            
- மு.இராகவன்

ரூ. 5 கோடி மணல் கொள்ளை! - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்

அடாவடி வசூல்!

டலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் பொதுமக்கள் போராட்டம் காரணமாக மணல் குவாரிகள் மூடப்பட்டாலும், டிராக்டர்கள் மற்றும் மாட்டுவண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடந்துவருகிறது. மணவாளநல்லூர், கோமங்களம், பரவளூர் உள்பட பல இடங்களில் மணல் கொள்ளை நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். “மணவாளநல்லூரில் உள்ள மணல் குவாரியில் இருந்து தினமும் சுமார் 750 மாட்டு வண்டிகளில் மணல் கொண்டுசெல்லப்படுகிறது. இவற்றுக்கு குவாரியில் ஏ.டி.எம் கார்டு மூலம் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால், மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் தனியாக அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர். ஒரு டிராக்டருக்கு ரூ.500, ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.100 என நிர்ணயித்து, தினமும் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை வசூலிக்கிறார்கள். இந்தப் பணத்தை அவர்களுக்குள் பிரித்துக்கொள்கின்றனர்” என்றார் மணவாளநல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவர்.

வழக்கறிஞர் மாய.மணிகண்டன், “இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மணல் அள்ளப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. முன்பு 40 அடி, 50 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. இன்று 200 அடிக்குப் போய்விட்டது. எனவே, மணல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்” என்றார்.

- ஜி.சதாசிவம்,  படங்கள்: எஸ்.தேவராஜன்