Published:Updated:

எஸ்.ஐ.யின் வாக்கி டாக்கி அபேஸ்!

எஸ்.ஐ.யின் வாக்கி டாக்கி அபேஸ்!
எஸ்.ஐ.யின் வாக்கி டாக்கி அபேஸ்!
எஸ்.ஐ.யின் வாக்கி டாக்கி அபேஸ்!

மதுரை: மதுரை மாவட்டம் சிலைமான் காவல்நிலைய எஸ்.ஐ. குணசேகரன் தனது வாக்கி டாக்கியை தொலைத்துவிட்டு வதைபட்டுக் கொண்டிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சக்கிமங்கலம் என்ற கிராமத்தில், இரண்டு பிரிவினருக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலை நேரில் சென்று விசாரித்தார் குணசேகரன். விசாரணையை சுமூகமாக முடித்து இரண்டு கோஷ்டிகளையும் திருப்பி அனுப்பிவிட்டுப் பார்த்த போது திகில் பிடித்துப் போனது குணசேகரனுக்கு!

அவர் கொண்டு வந்திருந்த வாக்கி டாக்கியை யாரோ குறும்புக்காரர்கள் சுட்டுக் கொண்டு போயிருக்கிறார்கள். அவரும் மற்ற போலீஸ்காரர்களும் ஊர்க்காரர்களும் வலைவீசி தேடியும் வாக்கி டாக்கி வந்தபாடில்லை. 

''எஸ்.ஐ.யை சிக்கலில் மாட்டிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் அந்த ஊர்க்காரர்கள் யாரோ வாக்கி டாக்கியை ஒளித்து வைத்திருக்க வேண்டும். எஸ்.ஐ.யை பிடிக்காத போலீஸ்காரங்களும் அவங்களுக்கு உடந்தையா இருந்திருக்கணும்" என்று கூறுகிறார்கள் சிலைமான் போலீஸார்.

##~~##
வம்பு வழக்கை சுமூகமாக முடித்துவிட்டார்கள். வாக்கி டாக்கி விவகாரம் இப்போது எஃப்.ஐ.ஆர். ஆகி இருக்கிறது. வாக்கி டாக்கி திரும்பக் கிடைக்கும் வரை குணசேகரனுக்கு திண்டாட்டம் தான்!
  
செ.சல்மான்