Published:Updated:

சீக்கியர் கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் விடுதலை: சிபிஐ மேல்முறையீடு!

சீக்கியர் கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் விடுதலை: சிபிஐ மேல்முறையீடு!
சீக்கியர் கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் விடுதலை: சிபிஐ மேல்முறையீடு!
சீக்கியர் கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் விடுதலை: சிபிஐ மேல்முறையீடு!

புதுடெல்லி: சீக்கிய மக்களுக்கு எதிரான படுகொலை வழக்கில் இருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளது.

கடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் 5 சீக்கியர்களைக் கொன்ற வழக்கில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில், சஜ்ஜன் குமார் உட்பட இருவர் நிரபராதிகள் என்றும், மற்ற மூவரும் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பானது. அதே சமயம் இக்கலவரம் தொடர்பாக சஜ்ஜன் குமார் மீது தொடரப்பட்ட மேலும் 2 வழக்குகளில் இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை.

இதனிடையே, சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சீக்கியர்கள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரது வீடுகளை முற்றுகையிட்டும் அவர்கள் போராட்டம் நடத்தியதால், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

##~~##
இந்நிலையில் சஜ்ஜன் குமாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இந்த வழக்கில், குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதும், மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.