Published:Updated:

இடதுபக்கம் போலீஸ் ஸ்டேஷன்... வலதுபக்கம் விநாயகர் கோயில்... கைவரிசைகாட்டிய கொள்ளையர்கள்

இடதுபக்கம் போலீஸ் ஸ்டேஷன்... வலதுபக்கம் விநாயகர் கோயில்... கைவரிசைகாட்டிய கொள்ளையர்கள்
இடதுபக்கம் போலீஸ் ஸ்டேஷன்... வலதுபக்கம் விநாயகர் கோயில்... கைவரிசைகாட்டிய கொள்ளையர்கள்

அரியலூர் செட்டிஏரிக் கரையில் அமைந்துள்ளது விநாயகர் கோயில். நகரின் பிரசித்திபெற்ற இக்கோயிலுக்குத் தினந்தோறும் பக்தர்கள் மற்றும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு கோயிலுக்குள் புகுந்து கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பக்தர்களின் காணிக்கை பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். கோயிலுக்கு வந்த கோயில் பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், கொள்ளையர்கள் குறித்து அடையாளம் காணும் வகையில் கைரேகைகளும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் இடது பக்கத்தில் காவல்நிலையம்  இருக்கிறது. வலது பக்கத்தில் கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும், இதன் அருகில் நீதிமன்றமும் பேருந்து நிலையமும் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தக் கோயிலில் நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராமன் பேசுகையில், ``அரியலூர் மாவட்டத்தில் சமீக காலமாக அதிக அளவில் கொலை கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இன்றுவரையிலும் காவல்துறை குற்றவாளிகளைக் கைது செய்தபாடில்லை. இன்றுகூட அரியலூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் காவல்நிலையம், நீதிமன்றம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள். அதன் அருகில் விநாயகர் கோயில் உள்ளது. அக்கோயிலின் உண்டியலில் பணம் திருடு போயுள்ளது. இதை உண்டியல் திருட்டு என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காவல்துறை எவ்வளவு அலட்சியமாகச் செயல்படுகிறது. இச்சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு. எப்போதும் போலவே இல்லாமல் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும். இல்லை திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்" என்று முடித்துக்கொண்டார்.