Published:Updated:

திருவள்ளூர் நகைக் கடையில் கொள்ளை - காவல் நிலையம் அருகே நடந்த துணிகரச் சம்பவம்!

திருவள்ளூர் நகைக் கடையில் கொள்ளை - காவல் நிலையம் அருகே நடந்த துணிகரச் சம்பவம்!
திருவள்ளூர் நகைக் கடையில் கொள்ளை - காவல் நிலையம் அருகே நடந்த துணிகரச் சம்பவம்!

திருவள்ளூர் பஜாரில் காவல்நிலையம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்க நகை மற்றும் ஐந்து லட்சம் ரொக்கம், பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான 80 வைரக்கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் பஜாரில் பல நகைக்கடைகளும், ஜளிக்கடைகளும் நிறைந்த பகுதி கொண்டமாபுரம். இந்தப்  பகுதியில் சாந்தி ஜுவல்லர்ஸ் என்ற தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் முன்பக்க இரும்பு ஷட்டர் பூட்டுகளை வெல்டிங் மெஷின்கொண்டு உடைத்து, கடையினுள் இருந்த 35 சவரன் தங்க நகை, ஐந்து லட்சம் ரொக்கம், பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான 80 வைரக் கற்கள்  கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் தடயங்களைச் சேகரித்தனர். 

நள்ளிரவு 12 மணி வரையிலும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் டவுன் காவல்நிலையம் உள்ள  பகுதியிலேயே இந்த துணிகரக் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகக் கடையின் உரிமையாளர்கள் இரவு பதினொரு மணிவரை கடை திறந்து வைத்திருப்பார்கள். அதிகாலை இரண்டு மணியிலிருந்து மூன்று மணிக்குள் தான் கொள்ளை நடந்திருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். திருவள்ளூர் பகுதியில் செவ்வாப்பேட்டை, புட்லூர், வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் வீடுகளில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவமும் வழிப்பறி கொள்ளையும் நடந்து வருகிறது. 

கொள்ளைச் சம்பவங்களை தடுக்கக் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது பாதிக்கப்பட்ட பொது மக்களின் கேள்வியாக உள்ளது. இதற்கிடையே கொள்ளைச் சம்பவம் தொடர்பாகத் திருவள்ளூர் டி.எஸ்.பி கங்காதரன் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்துத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நகைக்கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.