Published:Updated:

`முக ஜாடை என்னைப் போல் இல்லை' - மனைவி மீது சந்தேகத்தால் 3 மாதக் குழந்தையைக் கொன்ற கணவன்!

`முக ஜாடை என்னைப் போல் இல்லை' - மனைவி மீது சந்தேகத்தால் 3 மாதக் குழந்தையைக் கொன்ற கணவன்!
`முக ஜாடை என்னைப் போல் இல்லை' - மனைவி மீது சந்தேகத்தால் 3 மாதக் குழந்தையைக் கொன்ற கணவன்!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தன் குழந்தையின் தலையை நான்கு துண்டுகளாக வெட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (30) கூலி வேலை செய்து வருகிறார் அவரது மனைவி ராஜேஸ்வரி (26) இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. கடந்த 4 வருடங்களாக ராஜேஸ்வரி குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் முக ஜாடை தன்னைபோன்று இல்லை என்று மனைவியின் மீது சந்தேகப்பட்டு நேற்று இரவு ராஜேஸ்வரி நன்றாகத் தூங்கிய நேரம் பார்த்து 3 மாத கைக்குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார் கார்த்திகேயன்.

இதுகுறித்து போலீஸ் விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத நிலையில் மனைவி கருத்தரிக்கும் போதே கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. குழந்தை பிறந்ததும் அது தன்னை போன்றே இல்லை. இது வேறு யாருக்கோ பிறந்தது என்று அவராகவே முடிவெடுத்து குழந்தையை வெட்டிக் கொலை செய்துள்ளார். கார்த்திகேயன் தன் மனைவி மீது சந்தேகப்படுவதற்கு முக்கிய காரணமே அவர் மீது அவரே நம்பிக்கை வைக்காதது தான். 4 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருக்கவே அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கார்த்திகேயனுக்கு, குழந்தையே பிறக்காது என்று பேசுவதைக் கேட்டு, அதை  நம்பத் தொடங்கியிருக்கிறார். அந்த மன உளைச்சல்தான் அவர் மனைவி மீது சந்தேகப்படுவதற்கு காரணம் என்கிறனர் போலீஸ் வட்டாரத்தில்.