Published:Updated:

14 ஆண்டுகளாகக் கோமாவில் இருக்கும் பெண்ணுக்குப் பிரசவம்! - அமெரிக்காவில் அதிர்ச்சி

14 ஆண்டுகளாகக் கோமாவில் இருக்கும் பெண்ணுக்குப் பிரசவம்! - அமெரிக்காவில் அதிர்ச்சி
14 ஆண்டுகளாகக் கோமாவில் இருக்கும் பெண்ணுக்குப் பிரசவம்! - அமெரிக்காவில் அதிர்ச்சி

அமெரிக்காவில் 14 ஆண்டுகளாகக் கோமாவில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளச் செய்தியில், ``கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கினார். நீரில் மூழ்கியதால் கோமா நிலைக்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு பீனிக்ஸ் பகுதியில் உள்ள ஹேசியண்டா ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14 ஆண்டுகளாக இதே மருத்துவமனையில் அந்தப் பெண் பராமரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே, கடந்த மாதம் 29-ம் தேதி இந்தப் பெண் வலியால் முனங்கியுள்ளார். இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்களுக்கு விவரம் தெரியாமல் குழம்பிப் போயிருந்தனர். சிறிது நேரத்திலேயே அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 14 ஆண்டுகளாகக் கோமாவால் படுத்தப் படுக்கையாக இருக்கும் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விவகாரம் வெளியில் தெரிய போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். அப்பெண் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நடைபெற்றுவருகிறது. மருத்துவமனையில் உள்ள ஊழியர்களிடம் டி.என்.ஏ சோதனை நடத்த போலீஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. அப்பெண் கருவுற்றிருந்த விவரம் அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கோ செவிலியர்களுக்கோ தெரியாது எனக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களிடமும் போலீஸார் விசாரணை நடந்து வருகிறது.