Published:Updated:

காரோடு கொள்ளையடிக்கப்பட்ட 388 சவரன் நகைகள்! - கோவை அதிர்ச்சி

காரோடு கொள்ளையடிக்கப்பட்ட 388 சவரன் நகைகள்! - கோவை அதிர்ச்சி
காரோடு கொள்ளையடிக்கப்பட்ட 388 சவரன் நகைகள்! - கோவை அதிர்ச்சி

கேரளாவிலிருந்து கோவை தனியார் நகைக்கடைக்குக் கொண்டுவரப்பட்ட 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரோடு கொள்ளையடிக்கப்பட்ட 388 சவரன் நகைகள்! - கோவை அதிர்ச்சி

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸிலிருந்து 3.107 கிலோ தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளி நகைகள் கோவை நகைக்கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த நகைகளை காரில் அந்நிறுவனத்தின் டிரைவர்களான வில்பிரட் மற்றும் அர்ஜுன் ஆகிய இருவர் எடுத்து வந்துள்ளனர். மதியம் 12 மணியளவில் கேரள தமிழக எல்லைப் பகுதியைக் கடந்து கோவை அருகே உள்ள காக்காசாவடி பகுதியைக் கார் கடந்தபோது, பின்பக்கத்திலிருந்து மின்னல் வேகத்தில் சீறி வந்த இரண்டு கார்கள் நகை கொண்டுவந்த கார் மீது மோதியிருக்கின்றன. இதில், நிலை தடுமாறிய ஓட்டுநர் அர்ஜுன், காரை ஓரமாக நிறுத்தியுள்ளார். 

காரோடு கொள்ளையடிக்கப்பட்ட 388 சவரன் நகைகள்! - கோவை அதிர்ச்சி

அர்ஜுனும் வில்பிரட்டும் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள்ளாக மற்றொரு காருக்குள்ளிருந்து 2 பேர் கண் இமைக்கும் நேரத்துக்குள் கல்யாண் ஜுவல்லர்ஸின் கார் கண்ணாடியை உடைத்து திறந்து அர்ஜுனையும் வில்பிரட்டையும் இழுத்து கீழே தள்ளியுள்ளார்கள். அவர்கள் எழுந்து வருவதற்குள் அந்த இருவரும் காருக்குள் ஏறி காரோடு தங்க நகைகளைக் கொள்ளையடித்துக்கொண்டு பறந்துள்ளார்கள். திருட்டில் ஈடுபட்டவர்கள் வந்த இரண்டு கார்களில் ஒன்று ஸ்கார்பியோ மற்றொன்று ஆல்டோ என்பதைத் தவிர கார்களுடைய நம்பர், அதில் மொத்தம் எத்தனை பேர் வந்தார்கள் என எந்த விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.