Published:Updated:

வந்தாரை சீரழித்த குடிவெறி! - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...

வந்தாரை சீரழித்த குடிவெறி! - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...
பிரீமியம் ஸ்டோரி
News
வந்தாரை சீரழித்த குடிவெறி! - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...

வந்தாரை சீரழித்த குடிவெறி! - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...

குடிவெறி நிகழ்த்தும் குரூரங்களின் பட்டியலில், இதோ இன்னும் ஒரு சம்பவம். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், வடமாநிலம் ஒன்றிலிருந்து வந்த ஓர் இளம் பெண்ணைச் சீரழித்திருக்கிறது கும்பகோணத்தை சேர்ந்த கும்பல் ஒன்று!

வந்தாரை சீரழித்த குடிவெறி! - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது சிட்டி யூனியன் வங்கி. இந்த வங்கியின் வேறு மாநில கிளை ஒன்றில் பணிபுரிந்துவருகிறார் 23 வயது பெண் ரக்‌ஷிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது).

தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற ஒரு பயிற்சியில் கலந்துகொள்வதற்காக, கடந்த 2-ம் தேதி, சென்னையிலிருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக கும்பகோணம் வந்துள்ளார் ரக்‌ஷிதா. மழையால் ரயில் அரை மணி நேரம் தாமதமாகச் சென்றுள்ளது. இறங்கிய இடத்திலும் மழை பெய்ததால், இரவு 11 மணிக்கு மேல்தான், ரயில் நிலையத்தை விட்டு அவரால் வெளியே வர முடிந்துள்ளது.

‘இன்னும் பத்து நிமிடங்களில் ரூமுக்கு வந்துவிடுவேன்’ என்று தன் தோழிக்கு தகவல் கொடுத்துவிட்டு, ஆட்டோவில் ஏறியுள்ளார் ரக்்ஷிதா. ஆட்டோ, சொன்ன இடத்துக்குப் போகாமல், இருட்டிலே சுற்றவும், பயந்துபோனவர், ‘ஹெல்ப் ஹெல்ப்’ என்று கத்தியுள்ளார். உடனே, அந்த ஆட்டோக் காரர், செட்டி மண்டபம் பைபாஸ் சாலையில், நள்ளிரவில் இறக்கிவிட்டு, ‘எஸ்கேப்’ ஆகி விட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வந்தாரை சீரழித்த குடிவெறி! - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...

இருளில், மொழி தெரியாத ஊரில் டிராலி பேக்கை இழுத்துக்கொண்டே நடந்திருக்கிறார் ரக்‌ஷிதா. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், வசந்த், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நான்கு பேரும் குடிபோதையில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களிடம் சென்று, உதவி செய்யுமாறு ஆங்கிலத்தில் கேட்டுள்ளார் ரக்‌ஷிதா. மொழி புரிய வில்லை என்று, வெளிமாநிலத்தில் இருந்த தன் தமிழ் நண்பருக்கு போன் செய்து பேசவும் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தினேஷ் என்பவனின் டூ வீலரில், ரக்‌ஷிதாவை ஏற்றிக்கொண்டு செல்ல, மற்றவர்கள் வேறு வண்டிகளில் பின் தொடர்ந்துள்ளனர்.

வண்டி, வேகமாக நாச்சியார் கோயில் பைபாஸ் சாலை பகுதிக்குச் சென்றுள்ளது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த ரக்‌ஷிதா, மறுபடியும் உதவி கேட்டுக் கத்தியுள்ளார். அந்த நான்கு இளைஞர்களும் ‘கத்தினால் கொன்று விடுவோம்’ என்று மிரட்டி, புதர் பகுதிக்கு இழுத்துச்சென்று, கொடூரமான முறையில் ரக்‌ஷிதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தனக்கு ‘பீரியட் டைம்’ என்று அவர் கதறியதும், அந்த போதை மிருகங்களில் காதில் விழவே இல்லை. இத்தனைக்கும் அந்த நால்வருக்கும் வயது, 19 தொடங்கி 23-க்குள் தான்.

வந்தாரை சீரழித்த குடிவெறி! - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...

அதன்பின்பு, ரக்‌ஷிதாவிற்கு  ஆட்டோ ஒன்றை அனுப்பிவிட்டு, அவர்கள் தப்பிவிட்டனர். அறைக்குச் சென்று, தன் தோழிகளிடம் அவர் கதறிய பின்பே, விஷயம் வெளியே வந்துள்ளது. மறுநாள் வங்கி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிந்ததும், முதலில் இது வெளியே தெரியவந்தால், தங்கள் வங்கிக்கு அவப்பெயர் ஏற்படுமென்று வங்கி நிர்வாகம் தயக்கம் காட்டியுள்ளது. அதேசமயம் பெண்ணின் பெற்றோர் வந்தால், விவகாரம் விபரீதமாகி விடுமென்று கருதி, குற்றவாளிகளைப் பிடிக்க அழுத்தம் கொடுத்துள்ளது வங்கித் தரப்பு. ரக்‌ஷிதாவுக்கு தினேஷ் கொடுத்த ஆட்டோ நம்பரை வைத்தே, அத்தனை பேரையும் அள்ளியிருக்கிறது போலீஸ். கைதான நான்கு பேரும், வேறு சில பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து, செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதாகவும் கும்பகோணத்தில் தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. அதையும் போலீஸ் விசாரித்துவருகிறது.

வந்தாரை சீரழித்த குடிவெறி! - கும்பகோணத்தில் சிதைக்கப்பட்ட வடமாநிலப் பெண்...

இதுகுறித்து கும்பகோணம் டி.எஸ்.பி செங்கமல கண்ணன், ‘‘குற்றவாளிகளைக் கைதுசெய்து விட்டோம். நான்கு பேருக்கும் நிச்சயமாகக் கடுமையான தண்டனை வாங்கித்தருவோம்,’’ என்றார்.

சிட்டி யூனியன் வங்கியின் ஹெச்.ஆர் பிரிவில் பணிபுரியும் மோகன் என்பவரிடம் பேசினோம். “மிகவும் வருத்தப்படக்கூடிய சம்பவம் நடந்துவிட்டது. எங்கள் ஊழியர் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.

- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்