Published:Updated:

காட்டுப்பாதையில் சபரிமலைக்குச் சென்ற சேலம் பக்தர்! யானை மிதித்துக் கொன்ற பரிதாபம்

காட்டுப்பாதையில் சபரிமலைக்குச் சென்ற சேலம் பக்தர்! யானை மிதித்துக் கொன்ற பரிதாபம்
காட்டுப்பாதையில் சபரிமலைக்குச் சென்ற சேலம் பக்தர்! யானை மிதித்துக் கொன்ற பரிதாபம்

சபரிமலைக்கு எருமேலி வழியாக காட்டுப்பாதையில் சென்ற சேலத்தைச் சேர்ந்த பரமசிவன் என்ற பக்தர், யானை மிதித்ததில் பரிதாபமாக இறந்தார்.

காட்டுப்பாதையில் சபரிமலைக்குச் சென்ற சேலம் பக்தர்! யானை மிதித்துக் கொன்ற பரிதாபம்

சபரிமலையில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ம் தேதி நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகை ஆரம்பத்தில் குறைவாகவே காணப்பட்டது. அதிலும், கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழை காரணமாக சபரிமலை செல்லும் பெருவழி காட்டுப்பாதை தகர்ந்து கிடந்தது. இதனால், பக்தர்கள் பெரிய அளவில் காட்டுப்பாதை செல்லவில்லை. கடந்த சில வாரங்களாக பெருவழி காட்டுப்பாதை வழியாக பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். இந்த நிலையில், எருமேலியில் இருந்து பம்பைக்கு காட்டு வழியாகச் சென்ற சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரனின் மகன் பரமசிவன் (35) என்பவரை, இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி மிதித்தது.

காட்டுப்பாதையில் சபரிமலைக்குச் சென்ற சேலம் பக்தர்! யானை மிதித்துக் கொன்ற பரிதாபம்

வனத்துறை ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பக்தர்கள் பரமசிவனை மீட்டு, முண்டகாயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி, இந்த காட்டுப்பாதையில் சென்னையைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவரை காட்டு யானை குத்திக் கொன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.