Published:Updated:

`விருதுநகரில் ஒரே ஆண்டில் 64 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்' - காவல்கண்காணிப்பாளர் தகவல்!

`விருதுநகரில் ஒரே ஆண்டில் 64 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்' - காவல்கண்காணிப்பாளர் தகவல்!
`விருதுநகரில் ஒரே ஆண்டில் 64 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்' - காவல்கண்காணிப்பாளர் தகவல்!

விருதுநகர் மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடைபெற இருந்த திருமணங்கள் கண்டறியப்பட்டு 64 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் மு.ராசராசன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன் கூறும்போது, ``விருதுநகர் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2018-ம் ஆண்டில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. அதன்படி, 2018-ம் ஆண்டில் 58 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய 145 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிறரை கொலை செய்த 8 பேர் தாங்களும் தற்கொலை செய்துகொண்டனர். 3 ஆதாயக் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 46 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 37 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.21,36,260 மதிப்பிலான 72 சதவிகிதம் சொத்துகள் கைப்பற்றப்பட்டன. 105 கன்னக்களவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.1,75,26,880 மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டன.

மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய வழிப்பறி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால் பெருமளவிலான வழிப்பறி சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வாகன விபத்தில் 238 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையானது 2017-ம் ஆண்டோடும் ஒப்பிடும்போது 28 சதவிகிதம் குறைவு. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழிப்பறி மற்றும் பெண்கள் கேலி செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் 73 காவல் இருசக்கர ரோந்து வாகனங்கள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. அவசர அழைப்புக்காக ஹலோ போலீஸ் என்ற இலவச கைப்பேசி எண் மற்றும் வாட்ஸ்அப் (9150011000) செயல்பட்டு வருகிறது.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடைபெற இருந்த 64 திருமணங்கள் கண்டறியப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன'' என தெரிவித்தார்.