Published:Updated:

`பீடிக்காக அடித்துக் கொல்லப்பட்டாரா ஆயுள் தண்டனைக் கைதி?’ - கோவை மத்திய சிறை மர்மம்

`பீடிக்காக அடித்துக் கொல்லப்பட்டாரா ஆயுள் தண்டனைக் கைதி?’ - கோவை மத்திய சிறை மர்மம்
`பீடிக்காக அடித்துக் கொல்லப்பட்டாரா ஆயுள் தண்டனைக் கைதி?’ - கோவை மத்திய சிறை மர்மம்

கோவை மத்திய சிறையில் கடந்த 9-ம் தேதி, மாரடைப்பால் இறந்ததாக சொல்லப்பட்ட ராமசாமி கொலை செய்யப்பட்டு இறந்ததாக எழுந்துள்ள புகார் கோவை சிறைத்துறை அதிகாரிகளைப் பதற வைத்திருக்கிறது.’  

`பீடிக்காக அடித்துக் கொல்லப்பட்டாரா ஆயுள் தண்டனைக் கைதி?’ - கோவை மத்திய சிறை மர்மம்

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை அடுத்த தேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. 56 வயதான இவர், மதுபோதையில் தனது மகனோடு நடந்த தகராறில் மகனை கத்தியால்  குத்திக் கொலை செய்தவர். கடந்த 2015-ம் ஆண்டு, அந்தக் கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ராமசாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி, ராமசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் சிறைத்துறை அதிகாரிகள். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மரணமடைந்தார் ராமசாமி.  

கோவை அரசு  மருத்துவமனையில், ராமசாமியின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் தலை மற்றும் காதில் ஏற்பட்டிருந்த காயங்களைப் பார்த்து  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்கள். இந்த சர்ச்சையை அடுத்து  ராமசாமியின்  உடற்கூறு ஆய்வு, நீதிபதி முன்னிலையில் நடந்தது. மேலும், ராமசாமியின் மரணம் தொடர்பாக சிறையிலும் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில், வெளிவந்த தகவல் எல்லோரையும் திடுக்கிட வைத்திருக்கிறது. சிறையில் ராமசாமிக்கும் அவரோடு  அடைக்கப்பட்டிருந்த  சுரேஷுக்கும் பீடி  பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும்  இந்தச் சண்டை முற்றி மோதல் பெரிதானதால் சுரேஷ் ராமசாமியை கல்லால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் மர்ம மரணம் என்று முதலில்  வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸ் பிரேதப் பரிசோதனை மற்றும் நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு,  கொலை வழக்காக மாற்றி பதிவு செய்துள்ளது. ஆனால், சிறைத்துறை அதிகாரிகளோ மாரடைப்பின் காரணமாகவே மரணம் ஏற்பட்டதாகவே சொல்கிறார்கள். கோவை சிறையில் இப்படியான மர்ம மரணங்கள் தொடர்கதையாகி வருவதும், அதற்கு மாராடைப்பு என்ற காரணம் சொல்லப்படுவதும் சிறையின் கட்டுக்கோப்பு மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.