Published:Updated:

கொடநாடு எஸ்டேட் ஊழியர் தினேஷ் தற்கொலை ஏன்? - குடும்பம் கண்ணீர் பேட்டி! #Video

கண் பார்வைல கொஞ்சம் பிரச்னை இருக்கறதா சொல்லிட்டு இருந்தான். அதுக்காக ட்ரீட்மென்ட்டும் எடுத்துட்டு இருந்தான். கொடநாடு எஸ்டேட்ல நடந்த விஷயங்கள் எங்களுக்கு பயத்தைக் கொடுத்தது. அவனிடம் நாங்க கேட்டபோது,

கொடநாடு எஸ்டேட் ஊழியர் தினேஷ் தற்கொலை ஏன்? - குடும்பம் கண்ணீர் பேட்டி! #Video
கொடநாடு எஸ்டேட் ஊழியர் தினேஷ் தற்கொலை ஏன்? - குடும்பம் கண்ணீர் பேட்டி! #Video

ஒரு காலத்தில், தமிழக அரசின் இண்டாவது தலைமைச்செயலகம் என்று பேசப்படும் அளவுக்கு பவர் ஃபுல்லாக இருந்தது கொடநாடு எஸ்டேட். ஜெ , மறைவுக்குப் பிறகே சற்றே கண்டுகொள்ளப்படாமல் இருந்த கொடநாடு எஸ்டேட்டில், கொள்ளை, கொலை, அடுத்தடுத்து சாலை விபத்து மரணங்கள் என்று மீண்டும் பரபரப்புக்குள் வந்தது. இதையடுத்து, மூத்த பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்டுள்ள ஆவணப்படம், மீண்டும் கொடநாடு எஸ்டேட் குறித்து தேசிய அளவில் பேசவைத்துள்ளது.

இந்த வழக்கில், அடுத்தடுத்து நடந்த மர்ம மரணங்கள்தாம் இவ்வளவு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளன. இதில், கொடநாடு எஸ்டேட்டின் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றியவர் தினேஷ்குமார். சுமார் 7 ஆண்டுகள் கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய தினேஷின் திடீர் தற்கொலை, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

இந்நிலையில், கோத்தகிரி அருகே, கெங்கரை பகுதியில் உள்ள தினேஷின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரைச் சந்தித்தோம். "நல்லாதான் இருந்தான். வேலைல ரொம்ப சின்ஸியரா இருப்பான். கண்பார்வைல கொஞ்சம் பிரச்னை இருக்கிறதா சொல்லிட்டு இருந்தான். அதுக்காக ட்ரீட்மென்ட்டும் எடுத்துட்டு இருந்தான். கொடநாடு எஸ்டேட்ல நடந்த விஷயங்கள் எங்களுக்கு பயத்தை கொடுத்தது. அவனிடம் நாங்க கேட்டபோது,  'எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல'னுதான் சொன்னான். ஆனா, திடீர்னு தற்கொலை பண்ணிட்டான்" என்று கண்ணீர் வடிக்கிறார் தினேஷின் தந்தை போஜன்.

இது தொடர்பாக, "தினேஷ் தற்கொலை ஏன்? காரணம் தெரியாமல் கண்ணீர் விடும் குடும்பம்" என்ற தலைப்பில் இன்று வந்துள்ள ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ளது. தினேஷ் குடும்பத்தினரின் பேட்டியை வீடியோவாகவும் காணலாம்.