Published:Updated:

குப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள்,  கை - சென்னையில் அதிர்ச்சி 

எஸ்.மகேஷ்
குப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள்,  கை - சென்னையில் அதிர்ச்சி 
குப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள்,  கை - சென்னையில் அதிர்ச்சி 

சென்னை பெருநகர மாநகராட்சிக்குச் சொந்தமான பெருங்குடி குப்பை கிடங்கில், துண்டிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை ஆகியவை கிடந்தன. இந்த உடல் பாகங்களுக்குச் சொந்தமான பெண் யார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

குப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள்,  கை - சென்னையில் அதிர்ச்சி 

சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் 100 அடி சாலையில், சென்னை பெருநகர மாநகராட்சிக்குச் சொந்தமான பெருங்குடி குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கம். வள்ளுவர்கோட்டத்தில் இருந்து  பெருங்குடி குப்பைக்கிடங்கில் நேற்று குப்பை கொட்டப்பட்டது. குப்பைகளை ஊழியர்கள் தரம் பிரித்தெடுத்தபோது,  துண்டிக்கப்பட்ட இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை இருந்ததைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கால்கள், கை ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். 

பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ்  விசாரணை நடத்திவருகிறார். கைப்பற்றப்பட்ட கால்கள், கை ஒரு பெண்ணுக்குரியது என்றும், 30 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கை கால்களை  குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்துள்ளனர். 

குப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள்,  கை - சென்னையில் அதிர்ச்சி 

யார் அந்தப் பெண்? 

 பெண்ணின் கால்கள், கை மட்டுமே குப்பைக்கிடங்கில் வீசப்பட்டுள்ளதால், மற்ற உடல் பாகங்கள் எங்கே என்று போலீஸார் தேடி வருகின்றனர். வள்ளுவர் கோட்டம் பகுதியிலிருந்து வந்த குப்பை என்பதால், அந்தப் பகுதியில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். மேலும், சென்னையில் மாயமான பெண்கள்குறித்த விவரங்களையும் போலீஸார் சேகரித்துவருகின்றனர். விரைவில் அந்தப் பெண் யார் என்பதைக் கண்டுபிடித்துவிடுவோம் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். 

 சென்னையில் அடுத்தடுத்து   5 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இது, சென்னை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புளியந்தோப்பு, அரும்பாக்கம், ஜெ.ஜெ.நகர், ஆவடி என 4 இடங்களில் கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. 5-வதாக பெருங்குடி குப்பைக் கிடங்கில் இளம்பெண்ணின் துண்டிக்கப்பட்ட கால்கள், கை கிடைத்துள்ளன. இதனால் அந்தப் பெண்ணும் கொலைசெய்யப்பட்டு உடல் பாகங்களைத் துண்டித்து, ஆங்காங்கே வீசப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

புளியந்தோப்பு, அரும்பாக்கம் பகுதியில் நடந்த கொலைகள் முன்விரோதம் காரணமாக நடந்துள்ளன. ஆனால், ஜெ.ஜெ.நகர், ஆவடி பகுதிகளில் நடந்த கொலைகள், குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் நடந்துள்ளன. இந்தக் கொலைகளைத் தாண்டி, இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நடந்த கொலைச் சம்பவங்களால், சென்னை போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 அரும்பாக்கம் கொலைச் சம்பவம், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் சர்வசாதாரணமாக நடந்துள்ளது. இதனால், சென்னையில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, சென்னை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

குப்பையில் வீசப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள்,  கை - சென்னையில் அதிர்ச்சி 

பெருங்குடி குப்பைக்கிடங்கில் கிடந்த பெண்ணின் கால்கள், கை ஆகியவைகுறித்து விசாரிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. துணை கமிஷனர் முத்துச்சாமி மேற்பார்வையில், உதவி கமிஷனர் கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதில், தாம்பரத்தில் ஒரு இளம்பெண் மாயமான தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. அவரின் விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வள்ளுவர் கோட்டம் பகுதியிலிருந்து வந்த குப்பையில்தான் இளம்பெண்ணின் கால்கள், கை ஆகியவை கிடைத்துள்ளன. இதனால், அந்தப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். மேலும், அந்தப் பெண்ணின் கை ரேகைமூலம் ஆதார் பதிவுகளைக் கண்டறியலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.  கையில் வளையல் உள்ளது. மேலும், `டாட் டூ' வரையப்பட்டுள்ளது. கால் நகங்களில் நெயில் பாலிஷ் போடப்பட்டுள்ளது. கால்களும் கையும் அழுகவில்லை. இதனால், சமீபத்தில்தான் அவர் கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறோம்" என்றனர்.