பப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்! | Complaint in Food safety department coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:07:19 (23/01/2019)

பப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்!

பப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்!

கோவையில் பப்ஸ்க்குள் ஆணி இருந்தது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பப்ஸ் ஆணி

இது தொடர்பாக நூர் முகமது, சண்முகம் மற்றும் தினகரன் ஆகியோர் கோவை உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், ``ஆவின் பால் ஏஜென்ட் எடுப்பதற்காக, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆவின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது, அருகே  பப்ஸ் விற்பவரிடம் ரூ.20-க்கு 6 வெங்காய பப்ஸ் வாங்கி சாப்பிட்டோம். அதில், சண்முகம் சாப்பிட்ட பப்ஸில் 2 இன்ச் நீளமுள்ள ஆணி இருந்ததைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். விற்பனையாளரிடம் கேட்டதற்கு, நான் இதை வெளியில் இருந்து வாங்கி வருகிறேன் என்று கூறினார். இதுதொடர்பாக, ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றோம். அவர்கள் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, மனு அளிக்கச் சொன்னார்கள். இதனால், அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளோம்.

எனவே, இந்தப் புகார் மனுவை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, இதுபோன்ற உணவுப் பண்டகங்களைத் தயாரிக்கும் இடத்தை நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.