Published:Updated:

`தூங்குபவர்கள் மட்டுமே இலக்கு; 6 மாதங்களில் 10 கொலைகள்!’ - கும்பமேளாவில் சிக்கிய சீரியல் கில்லர்

`தூங்குபவர்கள் மட்டுமே இலக்கு; 6 மாதங்களில் 10 கொலைகள்!’ - கும்பமேளாவில் சிக்கிய சீரியல் கில்லர்
News
`தூங்குபவர்கள் மட்டுமே இலக்கு; 6 மாதங்களில் 10 கொலைகள்!’ - கும்பமேளாவில் சிக்கிய சீரியல் கில்லர்

`தூங்குபவர்கள் மட்டுமே இலக்கு; 6 மாதங்களில் 10 கொலைகள்!’ - கும்பமேளாவில் சிக்கிய சீரியல் கில்லர்

கடந்த 6 மாதங்களில் 10 பேரைக் கொடூரமான முறையில் கொலை செய்த சீரியல் கொலையாளி அலகாபாத் கும்பமேளாவில் பிடிபட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் 10 தொழிலாளிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தத் தொழிலாளிகள் சாலைகளில், மாநகராட்சிப் பூங்கா எனப் பொது இடங்களிலேயே கொலை செய்யப்பட்டு இருந்தனர். அதுவும் அவர்கள் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது  கூர்மையான கோடாரி மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டுத் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களை இப்படி கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளி யார் என்பது தெரியாமல் அலகாபாத் போலீஸார் திணறிவந்தனர். இதனால் இவரைப் பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசு கொடுக்கப்படும் என மாவட்டக் காவல்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவிலும் இதேபோன்று சிலர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதனால் கொலையாளியைத் தேடும் பணியைப் போலீஸார் முடுக்கிவிட்டனர். இறுதியில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொலையாளியை போலீஸார் கண்டுபிடித்தனர். கும்பமேளாவில் அவர் சுற்றித்திரிந்ததும் அங்கேயே வைத்து இந்தக் கொடூர குற்றவாளியைக் கைது செய்தனர். 38 வயதான அந்தக் குற்றவாளியின் பெயர் கல்வா சாயிபாபா. இவர்தான் தூங்கிக்கொண்டிருப்பவர்களை மட்டுமே இவர் கொலை செய்து வந்தார். ஏற்கெனவே கொலை குற்றத்துக்காகச் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தவர். ஜாமீனில் வந்தும் கொலை சம்பவங்களைச் செய்து வந்துள்ளார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து அலகாபாத் காவல்துறை அதிகாரி நிதின் திவாரி கூறுகையில், ``இவன்தான் இந்த பத்துக்கொலைகளையும் செய்துள்ளான். அவனிடமிருந்து ரத்த கரையுடன்கூடிய கூர்மையான கோடாரி, மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைக் கொண்டே இந்த 10 பேரையும் கொலை செய்துள்ளான். எதற்காகக் கொலை செய்தான் என்பது தெரியவில்லை. விசாரித்து வருகிறோம். இவனால் தாக்கப்பட்ட பலர் ஊனமுற்றவர்களாக மாறி வாழ்க்கையை இழந்துள்ளனர். இன்னும் சிலர் உயிருக்காக மருத்துவமனையில் போராடி வருகின்றனர். கும்ப மேளாவுக்கு வந்தவர் ஒருவரையும் கொலை செய்துள்ளார். சிசிடிவி உதவியால் கையும் களவுமாக இவனைப் பிடித்தோம்’’ என்று கூறியுள்ளார். இந்த சீரியல் கில்லர் பிடிபட்டது அலகாபாத் மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.