Published:Updated:

டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்

டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்
டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்
டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறைகள்

புதுடெல்லி: டெல்லியில் இரண்டு வயது பெண் குழந்தையிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் பெண்களுக்கு எதிராக குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தநிலையில் மீண்டும் ஒரு குழந்தையிடம் பாலியல் வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் கடந்த 12ம் தேதி மாலை ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு அருகில் இருந்த கூலித் தொழிலாளி ஒருவர் அவர்கள் குழந்தையிடம் விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறான். பெற்றோரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்துக்குப்பிறகு குழந்தை தனியாக இருப்பதை கண்டுள்ளனர்.

குழந்தையை தூக்கியபோது சில காயங்கள் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையிடம் பாலியல் வன்முறை நடந்துள்ளதை

##~~##
கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தொடர்புகொண்டு புகார் அளித்தனர். இதன்பேரில் 23 வயதான தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்'.