Published:Updated:

`நான் அந்த வீடியோவ ஷேர் பண்ணது உண்மைதான்; அதுல என்ன தப்பு?' - அர்ஜூன் சம்பத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`நான் அந்த வீடியோவ ஷேர் பண்ணது உண்மைதான்; அதுல என்ன தப்பு?' -  அர்ஜூன் சம்பத்
`நான் அந்த வீடியோவ ஷேர் பண்ணது உண்மைதான்; அதுல என்ன தப்பு?' - அர்ஜூன் சம்பத்

`நான் அந்த வீடியோவ ஷேர் பண்ணது உண்மைதான்; அதுல என்ன தப்பு?' - அர்ஜூன் சம்பத்

''நான் தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.,பா.ம.க., தே.மு.தி.க., என  எல்லா கட்சிகளையும் பகிரங்கமாக விமர்சித்து இருக்கிறேன். யாருமே இந்தளவுக்குக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதில்லை. தமிழ்நாட்டிற்குள் இந்துத்துவா, பா.ஜ.க ஊடுருவிய பிறகு அரசியல் கலாச்சாரமே கெட்டு விட்டது. இந்துத்துவா ஆட்களால் நானும் என் குடும்பமும் உளவியலாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்'' என்கிறார்  சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ்.

இதுபற்றி அவரிடம் பேசிய போது, ''நித்தியானந்தா மீது பாலியல் கிரிமினல் குற்றம் இருக்கிறது. அவரோடு அகில இந்திய கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஹெச்.ராஜா அமர்ந்திருப்பது என்ன நியாயம் என அவரிடம் போன் பண்ணி நாகரிகமான முறையில் கேட்டேன். அதற்கு அவர் ஆதாரம் இல்லாமல் என்னைச் சமூக விரோதி, நக்சலைட் என்றெல்லாம் பேசினார். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

அதையடுத்து ஹெச்.ராஜா தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்தது. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயந்தவன்

அல்ல என்று ஹெச்.ராஜாவிடம் மீண்டும், மீண்டும்..பேசி அந்த ஆடியோவை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. அதையடுத்து ஹெச்.ராஜா மற்றும் இந்துத்துவா ஆட்கள் நான் பல பெண்களை ரேப் செய்ததாகவும், என் மனைவி என்னிடம் இருந்து டைவர்ஸ் வாங்க விண்ணப்பித்து இருப்பதாகவும் புகைப்படங்களோடு உண்மைக்கு மாறான தகவல்களை தினந்தோறும் பரப்பி வருகிறார்கள். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஐ.டி -யில் இருந்தும் இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் ஷேர் செய்திருக்கிறார். இதனால்  என் மனைவி, குழந்தைகள்,தோழிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உளவியலாகப் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார். இதுபற்றி இந்து முன்னணி கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ''நான் ஷேர் பண்ணியது உண்மை. எனக்கு அது பெரிய குற்றமாகத் தெரியவில்லை. பியூஸ் மனுஷ். நாட்டுக்கு, தொழிலுக்கு, ஆன்மிகத்துக்கு, ஜத்குரு வாசுதேவ்-விற்கு, 8வழிச் சாலைக்கு எதிராகச் செயல்படுகிறார். சபரி மலைக்கு தன் வீட்டுப் பெண்களை கூட்டிச் செல்லுவதாக பதிவிட்டு எங்கள் மனதைப் புண்படுத்துகிறார்.அவர் ஒரு நக்சலைட். அவர்களாகவே ஒரு செயல் செய்து விட்டு மற்றவர்கள் மேல் திசை திருப்பி விடுவது அவர்களின் கொள்கை. அப்படி அவரே பதிவிட்டது தான் அந்த வீடியோ. அதைப் பார்த்தேன் உண்மையாக இருக்குமோ என்று ஷேர் பண்ணினேன். நக்சலைட்டுகள், இடதுசாரி கம்யூனிஸ்டுகள், சூழலியல் போராளிகள் என்று சொல்லக்கூடியவர்களின் அணுகுமுறை இப்படி தான் இருக்கும்'' என்றார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு