துயரில் துவண்டுபோயிருக்கிறது தேசம். போரில் அல்ல, ஒரு சாதாரணப் பயணத்தில் 44 வீரர்களைப் பறிகொடுத்துவிட்டுப் பதறிக்கொண்டிருக்கிறது இந்தியா. தீர்வுகள் எட்டப்பட வேண்டுமெனில், பிரச்னையின் வேர்கள் புரிந்திருக்க வேண்டும். இருபது வயதையே எட்டாத ஓர் இளைஞனை, தற்கொலைத் தாக்குதலுக்காகத் தயார்படுத்தியிருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பின்னணி என்ன? கோரிக்கைகள் என்ன? யார் இவர்கள்? எங்கு இருக்கிறார்கள்?

முகமதுவின் போர்ப்படை!

காஷ்மீர் பிரச்னையின் கொடூரமான நிஜமுகம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு. ‘காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்துவிடுங்கள்’ என்பதே இந்த அமைப்பின் கோரிக்கை. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நீருற்றி வளர்க்கும் நச்சு விதை இது. ஆப்கன் தலிபான்களுக்கும், லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் நெருக்கமானவர்கள் இவர்கள். இந்த இயக்கத்தை இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐ.நா சபை ஆகியவைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம்மீது தாக்குதல் நடத்தியது. பின்பு 2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியது, அதே ஆண்டு செப்டம்பரில் உரியில் தாக்குதல் நடத்தியது. இப்போது புல்வாமா தாக்குதல்.

ஹர்கத் - உல் -முஜாஹிதீன் அமைப்பின் தலைவராக, ஒசாமா பின்லேடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மசூத் அசாரை 1994-ம் ஆண்டு, காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் கைதுசெய்தது. 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தி, இந்திய அரசிடம் பேரம் பேசி மசூத் அசார், அஹமத் உமர் சயீத் ஷேக், முஸ்தாக் அஹமத் ஜர்கார் ஆகிய மூவரையும் விடுதலைசெய்ய வைத்தது ஹர்கத் -உல் -முஜாஹிதீன். அன்று இந்திய அரசால் விடுதலை செய்யப்பட்ட மசூத் அசார், வெளியில் வந்ததும் 2000-ம் ஆண்டு நிறுவியதே, ஜெய்ஷ்-இ-முகமது. ‘முகமதுவின் போர்ப்படை’ என்பதே இதன் பொருள்.

காஷ்மீரின் அரசியல் என்ன ?

காஷ்மீர் எல்லைப் பிரச்னை குறித்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்தத் தீர்வும் எட்டப் படவில்லை. தொடரும் இந்தப் போராட்டத்தில், தங்களின் அடையாளங்களைத் தொலைத்து நிற்கும் காஷ்மீர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்கள். இந்த அழுத்தங்களிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வழி என்று இளைஞர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டன ஜிகாதி அமைப்புகள். அப்படி 2018-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்தவர்தான், புல்வாமாவில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஆதில் அகமது தர். மறைந்த வீரர்களுக்கு இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்க, காஷ்மீர் பகுதியில் ஆதில் அகமது தரின் கான்டிபாக் கிராம மக்கள், தர்ருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கராச்சியில் ஒருமுறை பேசிய மௌலானா மசூத் அசார், “ஜிகாத்துக்காகத் திருமணம் செய்து கொள்ளுங்கள்; ஜிகாத்துக்காகக் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்; ஜிகாத்துக்காகவே பணம் சம்பாதியுங்கள். அப்போதுதான் அமெரிக்காவின், இந்தியாவின் கொடுமைகளை நாம் தகர்த்தெறிய முடியும்” என்றார்.

காஷ்மீரை, பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும், ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படையினரைத் துரத்தவேண்டும் இவையே ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பிரதானக் கொள்கைகள். இஸ்லாம் அல்லாத மதத்தினர் மீது காழ்ப்பும், தீவிர இஸ்லாம் மதவாதமும் இவர்களை இயக்கும் அடிப்படைக் காரணிகள். ஜெய்ஷ்-இ-முகமது பாகிஸ்தானிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பே. ஆனால், காவல் நிலையத்தில் வலம்வரும் ரவுடியைப்போல சுதந்திரமாக ஊருக்குள் வலம்வருகிறார்கள் இந்த அமைப்பினர். ஒருமுறை இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய பேரணியை முசாஃபர்பாத்தில் நடத்தியது. அப்போது பாகிஸ்தானின் காவல் படையும், ராணுவமும் அங்கே தலைகாட்டவே இல்லை. இப்போது புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பர்வாத் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எந்தவித விசாரணையும் இன்றி, புல்வாமா தாக்குதலில், இந்திய அரசும் ஊடகங்களும் பாகிஸ்தானைக் குற்றம் சொல்வதை ஏற்கமுடியாது”என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், காஷ்மீரின் நிலைமை மாறுவதாக இல்லை. இரு நாடுகளின் ராணுவத்தினருக்கும், ஜிகாதிகளுக்கும் இடையில் சிக்கித்தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். நாளுக்கு நாள் அங்கே ஜிகாத்துக்கு மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சொந்த தேசத்தையே எதிரியாகப் பார்க்கிறார்கள் காஷ்மீர் மக்கள். நமது ஆட்சியாளர்கள், அந்த மக்களிடம் நம்பிக்கை பெறுவது மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.

- ஜெனிஃபர் ம.ஆ.