Published:Updated:

ரூ.818 கோடி மோசடி வழக்கில் பைன் பியூச்சர் நிதி நிறுவன அதிபர்களுக்கு ஜாமீன்

கோவை:  கோவையில் நிதி நிறுவனம் நடத்தி தமிழகம் முழுவதும் 818 கோடி மோசடி செய்த வழக்கில் பைன் பியூச்சர் நிதிநிறுவன அதிபர்கள் விவேக், செந்தில் ஆகிய இருவருக்கும் கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ரூ.818 கோடி மோசடி வழக்கில் பைன் பியூச்சர் நிதி நிறுவன அதிபர்களுக்கு ஜாமீன்

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட பைன் பியூச்சர் நிதி நிறுவனமானது 818 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்களின் புகாரின் பேரில் நிதி நிறுவன அதிபர்கள் விவேக், செந்தில் மற்றும் விவேக்கின் தம்பி நித்தியானந்தன் ஆகியோரை பொருளாதார குற்றபிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்தியானந்தனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்றத்தில் விவேக், செந்தில் ஆகியோர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று நீதிபதி ஜோசப் டேவிட் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில்,விவேக் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் தலா இரண்டு லட்ச ரூபாய் பிணைத்தொகை கட்ட வேண்டும் என்றும், தினமும் கோவை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

பைன் பியூச்சர் நிறுவனம் மீது ஏற்கனவே 4000க்கும் மேற்பட்டோர் முதல் கட்டமாக புகார் அளித்துள்ளனர். தற்போது இரண்டாம் கட்டமாக பொதுமக்களிடம் புகார்கள் பெறும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கும் சூழ்நிலையில் உரிமையாளர்கள் இருவருக்கும் ஜாமீன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ச.ஜெ.ரவி