Published:Updated:

காந்தியவாதி சசி பெருமாள் திடீர் கைது

காந்தியவாதி சசி பெருமாள் திடீர் கைது
காந்தியவாதி சசி பெருமாள் திடீர் கைது
காந்தியவாதி சசி பெருமாள் திடீர் கைது

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாள் சென்னையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காந்தியவாதி சசி பெருமாள், சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யபட்டார். பின்னர் தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.

இதையடுத்து, அகிம்சை வழியில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார் சசி பெருமாள். இந்த நிலையில், பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க இன்று தனது ஆதரவாளர்களுடன் சசி பெருமாள் சென்றார்.

அப்போது, உண்ணாவிரதத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறி சசி பெருமாளையும், அவரது ஆதரவாளர்களையும் அங்கிருந்து காவல்துறையினர் வெளியேற்றினர். இதையடுத்து, தனது ஆதரளாவர்களுடன் தலைமைச் செயலகம் நோக்கி சசி பெருமாள் புறப்பட்டு சென்றார்.

##~~##
அங்கு சென்ற சசி பெருமாள், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கோஷங்கள் எழுப்பினார். இதையடுத்து, சசிபெருமாள் உள்பட 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்து பூக்கடை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.