அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்?

ஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்?

- பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை விவகாரம்...

மிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐ.ஜி-யாகப் பணிபுரிந்துவரும் முருகன்மீது அதே துறையில் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் 2018, ஆகஸ்ட் மாதம் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இடையே புகார் கொடுத்த பெண் எஸ்.பி-யை அங்கிருந்து இடமாற்றம் செய்துவிட்டனர். ஆனால், ஐ.ஜி முருகனை மட்டும் மாற்றவில்லை. அதே பதவியில் இன்று வரை தொடர்கிறார். தொடர்ந்து, “புகார் மீதான விசாரணை நடக்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறையை விட்டு முருகனை மாற்றியே ஆகவேண்டும். அப்போதுதான், சாட்சிகள் பயப்படாமல் நடந்ததை சொல்வார்கள்” என்று பெண் எஸ்.பி சட்டப் போராட்டம் தொடங்கினார். அடுத்து நடந்தது என்ன?

ஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்?

பெண் எஸ்.பி கொடுத்த புகார்மீது விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, முருகன்மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு விசாகா கமிட்டி சிபாரிசு செய்தது. இதற்கிடையே, விசாகா கமிட்டி மாற்றி அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், தமிழக மின்சாரத்துறையின் விஜிலென்ஸ் தலைவர் பதவியில் கூடுதல் டி.ஜி.பி ரேங்கில் ஸ்ரீலட்சுமி பிரசாத்தை விசாகா கமிட்டியின் புதிய தலைவராக நியமித்தனர். இதற்கிடையில், முருகன் சில கோரிக்கைகளை முன்வைத்து நீதிமன்றப் படியேறினார். அதனால், விசாரணைகள் நின்றுபோயின. ஆறு மாதங்கள் ஆகியும், பெண் எஸ்.பி புகார் விவகாரத்தில் எந்த ஒரு விசாரணை முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி முன்பு, முருகன் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே நீதிமன்றம் விதித்த தடைகளை ரத்துசெய்து, முருகன்மீது விசாரணையைத் தொடர்ந்து நடத்த உத்தரவிட்டார், தனி நீதிபதி. அதை எதிர்த்து முருகன் மேல்முறையீடு செய்தார். அதுதொடர்பான விசாரணை பிப்ரவரி 20-ம் தேதி நீதிபதிகள் சசிதரன், ஆதிசேவலு அடங்கிய அமர்வில் நடந்தது. இந்த வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்த நீதிபதிகள், முருகன்மீதான எந்த ஒரு விசாரணையும் நடத்தக் கூடாது என்று உத்தர விட்டனர். ஆக, மீண்டும் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், முருகன் தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கத் தடைவிதிக்க மறுத்துவிட்டது நீதிமன்றம்.

ஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்?

நீதிமன்றத்தில் நடந்த விவகாரம் ஒருபுறமிருக்க... முருகன் தொடர்பான விசாரணை விவகாரம் காவல்துறையிலும் உச்சத்தை எட்டியுள்ளது. பெண் எஸ்.பி மீதான புகாரை விசாரித்து வந்த ஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ்., திடீரென பிப்ரவரி 19-ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக மின்சாரத்துறை விஜிலென்ஸ் தலைவர் பதவியில் இருந்த ஸ்ரீலட்சுமி பிரசாத், மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த வாரம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணையைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டியிருக்கிறார் ஸ்ரீலட்சுமி பிரசாத். இதுதான் அவர் மாறுதலுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் பெண் ஐ.பி.எஸ் வட்டாரத்தில்.

ஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்?

இதுகுறித்து அவர்கள் நம்மிடம், “ஸ்ரீலட்சுமி பிரசாத் தலைமையில் விசாகா கமிட்டி விசாரிப்பதை ஐ.ஜி முருகன் தரப்பினர் எதிர்கிறார்கள். ஆனால், பெண் எஸ்.பி தரப்பினர் அவர்தான் விசாரிக்கவேண்டும் என்று சொல்லிவருகிறார்கள். உண்மையையும் ஆதாரத்தையும் விசாரணை அதிகாரிகளிடம் கொடுக்காமல், முருகன் தரப்பினர் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, விசாரணையை இழுத்தடிக்க முயற்சி செய்கிறார்கள். 5.10.2018 அன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு விசாகா கமிட்டி தலைவர் என்ற முறையில் ஸ்ரீலட்சுமி பிரசாத் ஒரு கடிதம் எழுதினார். விசாகா கமிட்டி விசாரணை நடத்த ஏதுவாக முருகனை அங்கிருந்து மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதை உயர் அதிகாரிகள் சிலர் விரும்பவில்லை. இவருக்கு ஏன் வேண்டாத வேலை என்றே கமென்ட் அடித்துள்ளனர். இதற்கிடையே, விவகாரம் நீதிமன்றத்துக்கு போய்விட்டது. கடந்த வாரம் தனி நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், தமிழக டி.ஜி.பி இருவரிடமும் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று ஸ்ரீலட்சுமி பிரசாத் போனில் விசாரித்திருக்கிறார். அவ்வளவுதான். டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்து விட்டதாம். தற்போது மீண்டும் நீதிமன்றம், விசாரணைக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது. ஆனாலும், ஸ்ரீலட்சுமி பிரசாத்தைப் பொறுத்தவரை, எந்தப் பதவியில் இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை மதித்து விசாகா கமிட்டித் தலைவராக நடுநிலையுடன் விசாரிப்பார் என்றே நம்புகிறோம்” என்கிறார்கள். 

- நமது நிருபர்