Published:Updated:

பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

Published:Updated:
பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

பல ஆண்டுகளாகத் தொடர்ந்த மணல் கொள்ளையால் பாலாறு சிதைக்கப்பட்டுக் கிடக்கும் நிலையில், மீண்டும் அங்கு மணல் எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள் என்ற தகவல் பல தரப்பினரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. வட மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் பாலாற்றைக் கூறு போடுவதால், அடுத்த சந்ததியினர் குடிக்கக்கூட தண்ணீரைத் தேடி அலையும் அவலம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

விதிமுறைகளை மீறி அரசு மணல் அள்ளுவதாகவும், மணல் கிடங்கு அமைத்து அதிகாரிகள் கள்ளத்தனமாக மணல் விற்பனை செய்வதாகவும், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் பூந்தமல்லி வட்டார மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆஜரான காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன், தனிநபர் யாராவது வீடு கட்டுவதற்காக மணலைச் சேமித்து வைத்திருப்பார்கள் என விளக்கம் அளித்தார். ஆனால் எதிர்த் தரப்பினர், மணல் கிடங்குகளின் புகைப்பட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அந்தப் படங்களைப் பார்த்து அதிர்ந்த நீதிபதி, கலெக்டர் சித்திரசேனனைக் கண்டித்ததுடன், ‘காஞ்சிபுரத்தில் நீண்ட காலமாக நடந்துவரும் மணல் கொள்ளையைத் தடுக்க எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வளவு பெரிய மணல் மலைகளை எப்படிக் கவனிக்காமல் இருக்க முடியும்? காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் மணல் கொள்ளை பற்றி சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். 2011 முதல் இன்றுவரை பணியில் இருந்த அதிகாரிகள், இவர்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் தலைமைச் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழக அரசு சித்திரசேனனை சஸ்பெண்டு செய்தது. அப்போதிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் மணல் எடுக்கத் தடை இருந்துவருகிறது.

இந்தத் தடையை ஐந்து ஆண்டுகளாக, மாவட்ட நிர்வாகம் நீட்டித்துவந்தது. 13.11.2018-ம் தேதியுடன் தடை முடிவடைந்த நிலையில், அந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்படவில்லை. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறுகளில் மணல் அள்ளுவது தொடர்பாக, தமிழக அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அனுமதி வரும் வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் எடுப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும். இந்த விவகாரத்தில் தமிழக அரசுதான் முடிவெடுக்க முடியும்” என அப்போதே அறிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

ஆனால், பாலாற்றில் மணல் எடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள் என்று இப்போது வெளியாகியுள்ள தகவல் சமூக ஆர்வலர்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாலாறு நெடுகிலும் 606 ஆற்றுக்கால்வாய்கள் இருப்பதாக அரசு ஆவணம் தெரிவிக்கிறது. பாலாற்றில் போதுமான நீர்வரத்து இல்லாததால், 50 சதவிகித விவசாயம் குறைந்துவிட்டது. வேலூர் மாவட்டத்தின் 90 சதவிகிதக் குடிநீர்த் தேவையை, பாலாறுதான் பூர்த்தி செய்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மறைமலை நகர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் கார் தொழிற்சாலைகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அதிக அளவில் வந்துவிட்டன. சென்னை புறநகரின் மக்கள் தொகையும் பெருகிக்கொண்டே போகிறது. அங்கு வசிக்கும் மக்களுக்குத் தேவையான அளவுக்கு நீர் ஆதாரங்கள் இல்லை. ஆறுகளை ஒட்டிய குளங்கள், ஏரிகள், கால்வாய் போன்ற நீர்நிலைகளும் நீர்வழிப்பாதைகள் தூர்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிவிட்டன. நீர் ஆதாரங்களும் படிப்படியாக அழிக்கப்படுகின்றன. பாலாற்றில் மணல் அள்ளுவதால் மற்ற இடங்களில் இருக்கும் நீர்நிலை சங்கிலித் தொடரும் அறுந்துவிடும் அபாயம் உள்ளது.

பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்

இது குறித்துப் பொதுப்பணித்துறை முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் அ.வீரப்பனிடம் கேட்டபோது, “பாலாற்றிலிருந்து 10-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் தாம்பரம், பல்லாவரம் உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிநீர் கிடைக்கிறது. பாலாற்றில் எங்கே மணல் எடுத்தாலும் இந்தக் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். பாலாற்றுப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தால், சுற்றுவட்டார கிராமங்களில் வறட்சி ஏற்படும். குடிநீருக்குப் போராட வேண்டிய அவல நிலை ஏற்படும். ஆற்றங்கரைப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உள்ளே செல்வதால், தென்னை உள்ளிட்ட மரங்கள் பட்டுப்போய்விடும்” என்றார்.

இது குறித்து காஞ்சிபுரம் பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் தியாகராஜனிடம்  நாம் கேட்டபோது, “இந்த விஷயம் குறித்து எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை” என்று முடித்துக்கொண்டார்.

செய்தி, படங்கள்: பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism