Published:Updated:

“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”
பிரீமியம் ஸ்டோரி
“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

Published:Updated:
“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”
பிரீமியம் ஸ்டோரி
“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

மிழக சுகாதாரத்துறை, நோய்களைப் பரப்பும் துறையாக மாறிவருகிறதோ என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுத்துவருகிறது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தத்தை ஏற்றி நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது, தமிழக சுகாதாரத்துறை. இந்தச் சம்பவம் நடந்த நூறு நாள்களுக்குள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று ரத்தத்தை ஏற்றியதாகப் புகாரில் சிக்கியிருக்கிறது கோவை அரசு மருத்துவமனை.

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியர் விஸ்வநாதன் - சித்ரா. இவர்களின் பெண் குழந்தைக்குத்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பதாகச் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

அவர்களைச் சந்தித்தோம். விஸ்வநாதனால் பேசக்கூட முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுகிறார். “பாப்பாவுக்கு எடுத்த ரத்த டெஸ்ட் ரிசல்ட் வந்ததும்,  அதைப் பார்த்துட்டு பெரிய டாக்டருங்க அவங்களுக்குள்ள ஏதோ பதட்டதோட பேசிக்கிட்டாங்க. என்ன ஆச்சோங்குற தவிப்புல கூர்ந்து கேட்டேன். முழுசா புரியலைன்னாலும் ஹெச்.ஐ.வி-ங்கிற வார்த்தை மட்டும் காதுல விழுந்துருச்சு. அப்போ நெஞ்சுக்குள்ள ஆரம்பிச்ச நடுக்கம் இப்போ வரை நிக்கலை சார்...”  என்றவர், பேச முடியாமல் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு குலுங்கி அழுதார். ஒருவழியாகச் சமாளித்து, பேசத் தொடங்கியவர், “எனக்குச் சொந்த ஊர் திருச்சி பக்கம். ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி திருப்பூருக்கு வந்து, தறிப் பட்டறையில வேலைக்குச் சேர்ந்தேன். மூணு வருஷத்துக்கு முன்னாலதான் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. என் மனைவிக்கு ஆண் பிள்ளைதான் இஷ்டம். எனக்குப் பெண் குழந்தை இஷ்டம். கடவுள் எங்க ரெண்டு பேரு ஆசையையும்  நிறைவேத்தி வெச்சாரு.  

திருச்சி ஜி.ஹெச்-ல ஆண், பெண்ணுன்னு ரெட்டைப்  பிள்ளைங்க பிறந்துச்சு. பெண் குழந்தை மட்டும் எடை குறைவா இருந்ததால ஒரு மாசமா ஆஸ்பத்திரியிலேயே வெச்சிருந்தாங்க. ஒன்றரை வருஷம் எந்தப் பிரச்னையும் இல்லை. திடீர்னு ஒருநாள் பாப்பாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. திருப்பூர் ஜி.ஹெச்-சுக்கு தூக்கிட்டு ஓடினோம். அங்கே குழந்தையோட நிலையைப் பார்த்துட்டு, கோயம்புத்தூர் ஜி.ஹெச்-சுக்கு அனுப்பிட்டாங்க.

கோயம்புத்தூர் ஜி.ஹெச்-சுல ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு, பாப்பாவுக்கு இதயத்தில் ஓட்டை இருக்குன்னு சொல்லிட்டாங்க. மொத்தம் ஏழு நாள் பாப்பாவை கோயம்புத்தூர் ஜி.ஹெச்-சுல வெச்சிருந்தோம். அப்போதான் பாப்பாவுக்கு ரத்தம் கம்மியா இருக்குன்னு சொல்லி ரத்தம் ஏத்தினாங்க. ரத்தம் முழுசா ஏறலை. அதுக்குள்ள இன்னொரு டாக்டர் வேகமா வந்து அந்த ரத்தப் பையைக் கழற்றிக்கொண்டுபோய் குப்பையில போட்டார், ‘ஏன் சார் பாதியிலயே எடுத்துட்டீங்க’ன்னு நான் கேட்டதற்கு, ‘இது வயசானவங்க ரத்தம்’னு சொல்லிட்டுப் போயிட்டார். எங்களுக்கு அப்போ எதுவும் தெரியலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

டிஸ்சார்ஜ் ஆகியும் பாப்பா சுணக்கமாவே இருந்துச்சு. இதயக் கோளாறால அப்படி இருக்கும்னு நினைச்சு கவலைப்பட்டோம். ஆறு மாசம் கழிச்சு பாப்பாவுக்கு உடம்பெல்லாம் தடிக்க ஆரம்பிச்சுருச்சு. காதுகளுக்குப் பின்னால கட்டி வந்துருச்சு. அம்மையா இருக்கும்னு நினைச்சு வேப்பிலை அரைச்சுப்போட்டோம். ஆனா, சரியாகலை. கடுமையா காய்ச்சல் வந்துச்சு. திரும்பவும் கோயம்புத்தூருக்கே தூக்கிட்டுவந்தோம். வந்ததும் காய்ச்சலைப் பார்த்துட்டு ரத்த டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்க. ரத்த டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் பெரிய டாக்டருங்களுக்குள்ள ஏதோ பேசிக்கிட்டாங்க. அப்பதான் இந்த விபரீதம் உறைச்சது. விஷயத்தைச் சொல்லி உடனே எனக்கும், என் சம்சாரத்துக்கும், என் இன்னொரு குழந்தைக்கும் ரத்த டெஸ்ட் எடுத்தாங்க. ஆனா, எங்க மூணு பேரில் யாருக்குமே ஹெச்.ஐ.வி இல்லை. பாப்பாவுக்கு மட்டும் எப்படி வரும்? அப்பதான் இவங்க ரத்தம் ஏத்திப் பாதிலேயே கழற்றிப்போட்டது ஞாபகத்துக்கு வந்துச்சு. ஜி.ஹெச் டீன் அசோகன் சாரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்.

‘இங்க ரத்தமே ஏத்தலை வேறு எங்கிருந்தாவது வந்துருக்கும்’னு சொல்லி அனுப்பிட்டார். எங்களைப் பேசவே விடலை. ரேஸ் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்குப் புகார் கொடுக்கப் போனேன். அங்க இருந்த போலீஸ்காரங்க, ‘இப்படி வாயால சொன்னா புகார் எடுத்துக்க முடியாது. அதுக்கு நிறைய ஆதாரம் வேணும்’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சப்பதான் என் சொந்தக்காரங்க மூலமா ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பினருக்குத் தகவல் போயிருக்கு. இப்போ அவங்கதான் இதுக்காகப் போராடிட்டு இருக்காங்க. என் பாப்பாவை எப்படியாச்சும் காப்பாத்தணும் சார். எங்களுக்கு வேற ஒண்ணும் வேணாம்” என்று சொல்லும் விஸ்வநாதன் குரலில், விவரிக்க முடியாத சோகம்.

விஸ்வநாதனின் மனைவி சித்ராவோ... பேசத் திராணியற்று கிடக்கிறார், “வைத்தியம் பார்க்க வந்தவங்களை, இப்படி மோசம் பண்ணிட்டு ‘எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை’ன்னு சொல்றாங்க. பாப்பாவுக்கு திருப்பூர்ல ஒரேஒரு முறை தடுப்பூசி போட்டிருக்கோம். அதுவும் அரசாங்கம் போட்டதுதான். இதைத் தவிரப் பாப்பாவுக்கு வேற எங்கேயும் வைத்தியம் பார்த்ததில்லை. அதற்கான வசதியும் எங்களுக்கு இல்லை. இங்கதான் என் பொண்ணுக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியிருக்காங்க. என் பாப்பாவை எப்படியாவது சரிபண்ணி கொடுத்துட்டா போதும் சார்... நாங்க வேற எதையும் கேக்கலை” என்றார் கண்ணீருடன்.

“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவ மனையின் டீன் அசோகனிடம்  விளக்கம் கேட்டோம். “அந்தக் குழந்தை எடை குறைவாகப் பிறந்ததால் பல்வேறு இடங்களில் சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள். வேறு எங்கிருந்தாவது அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மூலமாகவோ, ஏற்றப்பட்ட ரத்தம் காரணமாகவோ நோய்த்தொற்று பரவியிருக்கலாம். கோவை அரசு மருத்துவமனையிலிருந்து பரவ வாய்ப்பே இல்லை. இங்கு அந்தக் குழந்தைக்கு ரத்தச் சிவப்பு அணுக்கள்தான் ஏற்றப்பட்டுள்ளன. அதிலிருந்து ஹெச்.ஐ.வி பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இருந்தபோதிலும், அந்தக் குழந்தைக்குச் செலுத்தப்பட்ட ரத்த மாதிரியை ட்ரேஸ்  செய்து.. பரிசோதனை செய்துபார்த்துவிட்டோம். அதில் ஹெச்.ஐ.வி இல்லை. இங்கு மட்டுமல்லாது வேலூருக்கும் அனுப்பிப் பரிசோதனை செய்திருக்கிறோம். அங்கும் அந்த ரத்த மாதிரியில் ஹெச்.ஐ.வி இல்லை என்றுதான் வந்துள்ளது. அதனால், இங்கிருந்து குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பரவவில்லை. அதுமட்டுமில்லாது அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் இதற்கு முன்பு என்னை வந்து பார்க்கவே இல்லை. யாரையோ பார்த்துவிட்டு என்னைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். ரத்தம் ஏற்றும்போது வயசானவங்க ரத்தம் என்று சொல்லவெல்லாம் வாய்ப்பே இல்லை”என்றார்.

இந்தப் பிரச்னை தொடர்பாகப் போராடிவரும் மக்கள் கண்காணிப் பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், “விஸ்வநாதன் முதலில் போய் கேட்கும்போது இங்கு ரத்தமே ஏற்றப்படவில்லை என்று சொன்ன டீன்.. ஆவணங்களுடன் நான் போய்க் கேட்டதும், ரத்தச் சிவப்பு அணுக்கள்தான் ஏற்றினோம் என்றார். பிப்ரவரி 18-ம் தேதி நான் கேட்டுவிட்டு வந்த மறுநாளே பிப்ரவரி 19-ம் தேதி குழந்தைக்கு ஏற்றப்பட்ட ரத்த மாதிரியை, ‘நாங்கள் பரிசோதித்தது மட்டுமல்லாமல் வேலூருக்கும் அனுப்பிப் பரிசோதித்துவிட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார். ஒரே நாளில் எப்படி வேலூருக்கு அனுப்பிப் பரிசோதித்து முடிவைத் தெரிந்துகொண்டார்கள். இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால், அங்கும் புகாருக் குரிய ரசீதைத் தர மறுக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குழந்தையைக் காப்பாற்றும் சாத்தியக் கூறுகள் குறித்து அரசு உடனே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்